நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார் என்று தேசிய பிராண்ட்பேண்ட் மிஷன் தெரிவித்துள்ளது.
நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார் என்று தேசிய பிராண்ட்பேண்ட் மிஷன் தெரிவித்துள்ளது.
5வது தலைமுறைக்கான 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு வெற்றிகரமாக முடிந்தது. ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஏர்டெல்,அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகியவை ஏலம் எடுத்துள்ளன.
பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு
இந்நிலையில் 5 சேவை தொடங்குவதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்தநிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி 5ஜி சேவையை நாட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
தேசிய பிராண்ட் பேண்ட் மிஷன் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ இந்தியாவின் டிஜி்ட்டல் பரிமாற்றம் மற்றும் தொடர்பை புதிய உயரத்தில் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைக்கஉள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியி்ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்” எனத் தெரிவித்துள்ளது.
கேரள கடைக்காரரின் துணிச்சல் ! பிஎப்ஐ அமைப்பு ஹர்தாலுக்கு எதிராக கடையைத் திறந்து வியாபாரம்
இந்திய தொலைத்தொடர்பு மற்றும் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து இந்திய மொபைல் காங்கிரஸ் ஆசியாவிலேயே மிகப்பெரிய கண்காட்சியை நடத்துகிறது.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மிகக்குறுகிய காலத்தில் நாட்டில் 80 சதவீத பகுதிக்கு 5ஜி சேவையை கொண்டுவர மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தலைவர்களுக்கு குறி! இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர்க்க பிஎப்ஐ முயற்சி: என்ஐஏ அறிக்கை
பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில் “ இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு 5ஜி சேவை மிகப்பெரிய அளவில் துணை புரியும். இந்திய பொருளாதாரம் இதன் மூலம் ரூ.36.40 லட்சம் கோடியாக 2023 முதல் 2040ம் ஆண்டுக்குள் மாறும்” எனத் தெரிவித்துள்ளனர்.