link aadhaar to driving license: ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லையா? தெரிந்து கொள்ளுங்கள்

By Pothy Raj  |  First Published Sep 24, 2022, 11:47 AM IST

ஓட்டுநர் உரிமத்துடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை எவ்வாறு இணைப்பது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். 


ஓட்டுநர் உரிமத்துடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை எவ்வாறு இணைப்பது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். 

நாட்டில் போலி ஓட்டுநர் உரிமம் பெறுவது அதிகரித்துவருவதைத் தொடர்ந்து ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. 

Tap to resize

Latest Videos

அரசு, போலீஸ், விசாரணை அமைப்புகளைக் கண்டு மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: கபில் சிபல் கவலை

ஓட்டுநர் உரிமத்துடன் உங்கள் ஆதார் எண்ணை இதுவரை இணைக்கவில்லை என்றால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு சேவைகளைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். 
அத்தகைய சூழலில் இருந்து தவிர்க்க, ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். ஆதாருடன், ஓட்டுநர் உரிமத்தை மிகவும் எளிதாக இணைக்க முடியும்.

மொபைல் போனுக்கு வரும் மோசடி அழைப்புகள், போலி எஸ்எம்எஸ்களில் இருந்து விரைவில் விடுதலை

ஆதார் எண்ணுடன், ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது எப்படி

1.    மாநில போக்குவரத்து அலுவலகத்தின் இணையதளத்துக்கு முதலில் செல்ல வேண்டும். 

2.    அதில் ஓட்டுநர் உரிமத்துடன், ஆதார் எண்ணை இணைக்கும் “ஆதார் லிங்க்” பட்டன் வழங்கப்பட்டிருக்கும்.

3.    அதைக் கிளிக் செய்தபின், அந்த பாக்ஸின் கீழே டிரைவிங் லைசன்ஸ் என்ற பட்டன் இருக்கும்

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது: நாராயண மூர்த்தி வேதனை

4.    அதில் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை பதிவு செய்ய வேண்டும்

5.    அதன்பின் “கெட் டீடெய்ல்” என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

6.    ஆதார் எண்ணையும், ஆதாரில் பதிவாகியுள்ள செல்போன் எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

7.    கடைசியாக சப்மிட் என்ற பட்டனை அழுத்த வேண்டும். 

8.    சப்மிட் கொடுத்தவுடன் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக ஓடிபி எண் வரும்.

9.    இந்த ஓடிபி எண்ணை அதில் பதிவு செய்தவுடன், ஆதார் எண்ணும், ஓட்டுநர் உரிமமும்ணைக்கப்பட்டது என்று செய்தி வரும்.


 

click me!