narayana murthy:Infosys: காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது: நாராயண மூர்த்தி வேதனை

By Pothy Raj  |  First Published Sep 24, 2022, 9:32 AM IST

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது. முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்கப்படவில்லை என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது. முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்கப்படவில்லை என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் நகரில் உள்ள ஐஐஎம்ஏ கல்வி நிறுவனத்தில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி பங்கேற்றார். அப்போது இளம் தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்களுடன் நாராயண மூர்த்தி கலந்துரையாடினார். 

Tap to resize

Latest Videos

அப்போது அவர் பேசியதாவது:

லண்டனில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினராக கடந்த 2008 முதல் 2012ம் ஆண்டுவரை இருந்தேன். முதல் சில ஆண்டுகளில் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தபோதெல்லாம் சீனா குறித்துதான் பெருமையாகப் பேசுவார்கள். ஏறக்குறைய 30 முறையாவது சீனாவின் பெயரை பெருமையாகக் குறிப்பிட்டனர். ஆனால், இந்தியாவின் பெயரை ஒருமுறை மட்டும்தான் குறிப்பிட்டனர்.

துரதிர்ஷ்டமாக இந்தியாவுக்கு அப்போது என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அற்புதமான பொருளாதார வல்லுநர், தனிப்பட்ட ரீதியிலும் சிறந்தமனிதர். அவர்மீது மிகப்பெரிய மதிப்பு எனக்கு இருக்கிறது.

ஆனாலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது. அனைத்து முடிவுகளும் தாமதமாக எடுக்கப்பட்டன, முடிவுகள் எடுக்கப்படவில்லை.

அட்ராசக்கை! அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை: முழுப் பட்டியல் இதோ !

ஆதலால் இந்தியாவின் பெயரை அனைத்து நாடுகளிலும் பெருமையாகக் குறிப்பிடுமாறு குறிப்பாக சீனாவில் குறிப்பிடுமாறு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு என நான் நினைக்கிறேன். இந்த பெரும் செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு நேரத்தில் இந்தியாவை மேற்கத்திய மக்களும், நாடுகளும் தாழ்வாகப் பார்த்த காலம் இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவை ஒரு விதமான மரியாதையுடன் அணுகிறார்கள், பார்க்கிறார்கள். இப்போது இந்தியா உலகளப் பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை: சாம்சங் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்

1991ம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தின் போது மன்மோகன் சிங் நிதிஅமைச்சராக இருந்தார். தற்போதுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கும், பலன் அடையவும் உதவுகின்றன. 

நான் உங்கள் வயதில் இருந்தபோது, அதிகமான பொறுப்பு இல்லை. ஏனென்றால் அந்த காலத்தில் இந்தியாவிடம் இருந்தும், என்னிடம் இருந்தும் அதிகமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்று,நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல உங்களிடம் இருந்து பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு சரியாந, தகுதியான  போட்டியாளராக இந்தியாவை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் மாற்றுவார்கள் என நினைக்கிறேன்.

மகிந்திரா நிதி நிறுவனம் ஏஜென்டுகள் மூலம் கடனை வசூலிக்கத் தடை: ஆர்பிஐ அதிரடி

சீனாவின் பொருளாதாரம் இந்தியாவைவிட 6 மடங்கு பெரிதானது. 44 ஆண்டுகளில் 1978 முதல் 2022 வரை இந்தியாவை விட சீனா பன்மடங்கு சென்றுவிட்டது. 6 மடங்கு என்பது நகைச்சுவை அல்ல. சில விஷயங்களை நீங்கள் நடத்திக்காட்டினால், சீனாவுக்கு இன்று கிடைக்கும் மரியாதை இந்தியாவுக்கும் கிடைக்கும்

இவ்வாறு நாராயண மூர்த்தி தெரிவித்தார்
 

click me!