Mahindra Finance: RBI: மகிந்திரா நிதி நிறுவனம் ஏஜென்டுகள் மூலம் கடனை வசூலிக்கத் தடை: ஆர்பிஐ அதிரடி

By Pothy RajFirst Published Sep 23, 2022, 11:11 AM IST
Highlights

கடன் வசூலிப்பு அல்லது மூன்றாம் தரப்பு நபர்களைப் பயன்படுத்தி கடன் பெற்றவர்களிடம் கடனை வசூலிக்கக் கூடாது, மறு உத்தரவு வரும்வரை இதை தொடர வேண்டும் என்று மகிந்திரா நிதி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கடன் வசூலிப்பு அல்லது மூன்றாம் தரப்பு நபர்களைப் பயன்படுத்தி கடன் பெற்றவர்களிடம் கடனை வசூலிக்கக் கூடாது, மறு உத்தரவு வரும்வரை இதை தொடர வேண்டும் என்று மகிந்திரா நிதி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், தங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டு கடன் பெற்றவர்களிடம் கடனை வசூலிக்கத் தடையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்கம் விலை திடீர் உயர்வு ! சவரனுக்கு 100 ரூபாய்க்கு மேல்அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபார்க் மாவட்டத்தில், விவசாயி ஒருவர் டிராக்டர் வாங்கி மகிந்திரா நிதி நிறுவனத்தில் கடன்  பெற்றிருந்தார். கடன் தவணையாக ரூ.1.30 லட்சம்  செலுத்த தவறியநிலையில், கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் கடன் தவணையை விவசாயிடம் கேட்டனர். 

அதற்கு கடன்தவணை செலுத்த ரூ.1.20 லட்சம் இருப்பதாகவும், ரூ.10 ஆயிரம் பணம் குறைவாக உள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, விவசாயி வாங்கிய டிராக்டரை வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் ஓட்டிச் செல்ல முயன்றனர். அப்போது டிராக்டரை ஓட்டிச் செல்வதைத் தடுக்க முயன்றபோது, விவசாயின் கர்ப்பணி மகள் மோனிகா தேவி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை: சாம்சங் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடன் வசூலிப்பு ஏஜென்ட் ரோஷன் சிங்கை(வயது26) போலீஸார் கைது செய்தனர். ஹசாரிபாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோதே கூறுகையில் “ மகிந்திரா நிதி நிறுவனம் மூன்றாம் தரப்பு நபர்கள் மூலம் கடன் வசூலிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. மோனிகா தேவி உயிரிழந்தது தொடர்பாக ரோஷன் சிங் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

முத்ரா திட்டம் பயனற்றது! ரூ.3.73 லட்சத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுப்பிங்க? ப.சிதம்பரம் கேள்வி

ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில், “ மகிந்திரா நிதி நிறுவனம் தனது கடன் வசூலிப்பு நடவடிக்கைகளுக்கு வெளியாட்களையோ அல்லது வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் வசூலிப்பையோ செய்வது தடை செய்யப்படுகிறது. அதேசமயம், கடன் வசூலிப்பு பணிகளுக்கு மகிந்திரா நிதி நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களைப் பயன்படுத்த தடை ஏதும் இல்லை. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

click me!