தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துக்கு மத்தியில் இன்று விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துக்கு மத்தியில் இன்று விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,675 ஆகவும், சவரன், ரூ.37,400 ஆகவும் இருந்தது.
அட்ராசக்கை! அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை: முழுப் பட்டியல் இதோ !
இந்நிலையில் வெள்ளிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.4,690ஆக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,520ஆக ஏற்றம் கண்டுள்ளது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,690ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் விலை குறைந்த நிலையில் இன்று 2வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
முத்ரா திட்டம் பயனற்றது! ரூ.3.73 லட்சத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுப்பிங்க? ப.சிதம்பரம் கேள்வி
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம் தொடர்ந்து 4வது முறையாக உயர்த்தப்பட்டது. இதனால் பல நாடுகளின் கரன்ஸிக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு கூட நேற்று வரலாற்றில் இல்லாத அளவு ரூ.80க்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது. பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்த்தப்படும் நிலையில் அதன் அறிவிப்பும் விரைவில் வர உள்ளது.
இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை: சாம்சங் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்
பெடரல் வங்கி வட்டி வீத உயர்வால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகரித்துள்ளதுவெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று, 20 பைசா அதிகரித்து ரூ.63.20ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.63,200 ஆகவும் விற்கப்படுகிறது