மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முத்ரா கடன் திட்டம் நடைமுறைக்கு பயனற்ற திட்டம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முத்ரா கடன் திட்டம் நடைமுறைக்கு பயனற்ற திட்டம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சிறு தொழில்கள், வர்த்தகத்தை ஊக்குவித்து, வளர்க்கும் விதத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதானி தூங்கி எழுந்தால் ரூ.1,600 கோடி!12 இந்தியர்களிடம் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்து
இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கார்ப்பரேட் அல்லாத, வேளாண் தொடர்பில்லாத சிறு மற்றும் குறுநிறுவனங்கள் கடன் பெறலாம்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முத்ரா கடன் திட்டம் குறித்து விமர்சித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டு்ள்ளார்.
அவர் கூறியதாவது:
“ முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வாராக் கடன்கள்(என்பிஏ) அதிகம் இருப்பது குறித்து நான் வியப்படையவில்லை.
கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி
நான் நீண்டகாலமாகப் பார்த்து வருகிறேன், முத்ரா கடன் திட்டம் வணிகத்தை ஊக்குவிக்க, வளர்க்க நடைமுறையில் பயனற்றது. தமிழகம் புதுச்சேரி மண்டலத்தைப் பற்றி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி பெருமைகொள்கிறது.
எஸ்பிஐ வங்கி முத்ரா திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் 26 ஆயிரத்து 750 பயனாளிகளுக்கு ரூ.1000 கோடி கடன் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கணிதம் பற்றி தெரியாமல் இருக்கும்வரை இந்த கடன் தொகை பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால், சராசரி கணக்கிட்டால், 26,750 பயனாளிகளுக்கு தலா ரூ.3,73 லட்சம்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது.
செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்
ரூ.3.73 லட்சத்தில் என்ன புதிதாக வர்த்தகம் தொடங்கிவிட முடியும், இந்த 3.73லட்சம் ரூபாயில் தொழில் தொடங்கி, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்”
இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.