gold rate today: தங்கம் விலை மீண்டும் குறைவு! சவரனுக்கு ரூ.80 சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Sep 22, 2022, 10:25 AM IST
Highlights

தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துடன் இந்த வாரத்தில் இருந்து வருகிறது.  கடந்த 3 நாட்களில் 3வது முறையாக விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துடன் இந்த வாரத்தில் இருந்து வருகிறது.  கடந்த 3 நாட்களில் 3வது முறையாக விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.  
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,650 ஆகவும், சவரன், ரூ.37,200 ஆகவும் இருந்தது. 

செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

இந்நிலையில் வியாழக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 8 குறைந்து ரூ.4,640ஆக சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 வீழ்ச்சி அடைந்து, ரூ.37,120ஆக குறைந்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,640ஆக விற்கப்படுகிறது.

கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி

தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கத்துடனே இந்த வாரத்தில் நகர்ந்து வருகிறது. திங்கள்கிழமையன்று தங்கம் கிராம், ரூ.4632 ஆக இருந்த நிலையில் அதிகபட்சமாக ரூ.4,650 வரை உயர்ந்து, தற்போது சரிந்துள்ளது.  தங்கத்தின் விலை தொடர்ந்து ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. 

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்வு குறித்த அறிவிப்பைப் பொறுத்து தங்கத்தின் விலையில் நிலைத்தன்மை நீடிக்கும். 

அதானி தூங்கி எழுந்தால் ரூ.1,600 கோடி!12 இந்தியர்களிடம் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்து

வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று, 20 பைசா அதிகரித்து ரூ.62.40ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.62,400 ஆகவும் விற்கப்படுகிறது

click me!