adani: mukesh ambani: அதானி தூங்கி எழுந்தால் ரூ.1,600 கோடி!12 இந்தியர்களிடம் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்து

By Pothy Raj  |  First Published Sep 22, 2022, 10:09 AM IST

இந்தியாவில் 12 இந்தியர்களின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கைக் கடக்கும் என்று ஐஐஎப்எல் ஹரூன்இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் 12 இந்தியர்களின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கைக் கடக்கும் என்று ஐஐஎப்எல் ஹரூன்இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டில் தொழிலதிபர் கெளதம் அதானிக்கு தினசரி ரூ.1,612 கோடி வருமானம் வந்தது. அதாவது அதானி தினசரி தூங்கி எழுந்து பார்த்தால் அவருக்கு ரூ.612 கோடி வருமானம் கிடைத்திருக்கும். அதானியின் சொத்து மதிப்பு ரூ.10.90 லட்சம் கோடியாகும் என்று ஹரூன் இந்தியா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

தொழிலதிபரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, சைரஸ் பூனாவல்லா, ஷிவ் நாடார், ராதாகிருஷ்ண தாமணி ஆகியோரின் சொத்து மதிப்பும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.

உருக்கு துறையில் களமிறங்கும் அதானி குழுமம்: ஆர்ஐஎன்எல் ஏலத்தில் பங்கேற்க திட்டம்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க், பெர்னஆர்ட் அர்னால்டுக்கு அடுத்த இடத்தில் தற்போது கெளதம் அதானி உள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் அதானி ரூ.5 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் வரிசையில் 8வது இடத்தில் இருந்த அதானி, தற்போது முதலிடத்தில் உள்ளார், சொத்துமதிப்பு 15.4 மடங்கு உயர்ந்துள்ளது. 49வது இடத்தில் இருந்த அதானி சகோதரர் வினோத் அதானி தற்போது 6வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். 

அதானியைத் தொடர்ந்து 2வதாக, முகேஷ் அம்பானியிடம் ரூ.7.90 லட்சம் கோடி சொத்து உள்ளது. முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு தினசரி ரூ.209 கோடி வருமானம் கிடைத்தது.

கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி

அதானியின் இளைய சகோதரர் வினோத் அதானியிடம் ரூ.1.60 லட்சம் கோடி உள்ளது. இவர் இந்தியாவின் 12 கோடீஸ்வரர்களில் 6-வது இடத்தில் உள்ளார்.

சீரம் மருந்து நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லாவிடம் ரூ.2 லட்சம் கோடி சொத்தும், ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடாரிடம் ரூ.1.85 லட்சம் கோடியும் சொத்து உள்ளன. பூனாவல்லாவுக்கு கடந்த ஆண்டு தினசரி ரூ.114 கோடி வருமானம் கிடைத்தது.

இவர்கள் தவிர ராதா கிருஷ்ண தாமினி(ரூ.1.75 லட்சம் கோடி), இந்துஜா குடும்பத்தினர்(ரூ.1.65 லட்சம் கோடி), எல்என் மிட்டல்(ரூ.1.51 லட்சம் கோடி), திலீப் சாங்வி (ரூ.1.13 லட்சம் கோடி),உதய் கோடக் (ரூ.1.19 லட்சம் கோடி).

செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

குமார மங்கலம் பிர்லா, நிரஜ் பஜாஜ் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கிய 100 தொழில்முனைவோரின் சொத்து மதிப்பு மட்டும் 1000 கோடி டாலரைக் கடக்கும். இவர்களின் சராசரி வயது 40 ஆக இருக்கும்போது, ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக இருக்கிறது.

ஜெப்டோ எனும் டெலிவரி நிறுவனத்தின் நிறுவனராக இருப்பவர் 19வயதான கைவல்யா வோரா. இவர்தான் இளம் தொழில்முனைவோர். இவர் தவிர நைக்கா நிறுவனர் பல்குனி நய்யார், பயோகான் நிறுவன அதிபர் கிரண் மஜூம்தாரை முறியடித்து பெண் கோடீஸ்வரர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

இதில் வேதாந்த் பேஷன் நிறுவனத்தின் அதிபர் ரவி மோடியின் சொத்து மதிப்பு மட்டும் கடந்த ஆண்டு 376 சதவீதம் உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து நய்யாரின் சொத்து மதிப்பு 345 சதவீதம் கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது. 

மும்பையில் மட்டும் 283 கோடீஸ்வரர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து டெல்லியில் 185 பேரும், பெங்களூருவில் 89 பேரும் உள்ளனர்.இவர்களின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடியாகும்.
 

click me!