அதானி குழுமம் உருக்குத் துறையில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 2023ம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம்(ஆர்ஐஎன்எல்)( விசாகப்பட்டினம் உருக்காலை) ஏலத்தில் பங்கேற்க அதானி குழுமம் ஆர்வமாக இருக்கிறது
அதானி குழுமம் உருக்குத் துறையில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 2023ம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம்(ஆர்ஐஎன்எல்)( விசாகப்பட்டினம் உருக்காலை) ஏலத்தில் பங்கேற்க அதானி குழுமம் ஆர்வமாக இருக்கிறது
சிமெண்ட் துறையில் களமிறங்கிய அதானி குழுமம், அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தைக் கைப்பற்றி, அதானி-ஹோல்சில் ஒப்பந்தம் செய்தது. அடுத்ததாக உருக்குத் துறையில் கமிறங்க உள்ளது.
கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி
ஏற்கெனவே உருக்குத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்களான ஜேஎஸ்டபிள்யு(JSW) டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் உள்ள நிலையில் இவற்றுக்குப் போட்டியாக அதானி குழுமம் நுழைகிறது.
சமீபத்தில்தான் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி நிறுவனத்தை அதானி குழுமம் விலைக்கு வாங்கியது. இதன் மூலம் நாட்டிலேயே சிமெண்ட் தயாரிப்பில் 2வது மிகப்பெரிய நிறுவனமாக அதானி குழுமம் வந்தது. தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்த அதானி குழுமம், 5ஜி ஏலத்தில் பங்கேற்றது.
கணிக்க முடியாத தங்கம் விலை! சவரன் ரூ37ஆயிரத்துக்கும் கீழ் சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
கடந்த ஜனவரி மாதம் தென் கொரியாவின் போஸ்கோவுடன் சேரந்து 500 கோடி டாலர் மதிப்பில் குஜராத்தின் முந்த்ரா பகுதியில் உருக்கு ஆலை அமைக்கும் ஒப்பந்தம் செய்தது. அதுமட்டுமல்லாமல் கிரீன் எனர்ஜியிலும் அதானி குழுமம் தீவிரம் காட்டி வருகிறது
ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம்(ஆர்ஐஎன்எல்) நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு முதல் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பங்கு விற்பனை மூலம் ரூ.1.50 லட்சம் கோடி திரட்டவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் 2023ம் ஆண்டு ஜனவரியில் நடக்கலாம்.
இந்த நிறுவனத்தில் மொத்தம்6,500 அதிகாரிகள், 12 ஆயிரம் தொழிலாளர்கள், 20ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். ஆண்டுக்கு 73 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யும்திறன் ஆர்ஐஎன்எல் நிறுவனத்துக்கு உண்டு
செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்
கடந்த 2020-21 நிதியாண்டில் ஆர்ஐஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.789 கோடி இழப்பு ஏற்பட்டது, 2019-20ம் ஆண்டில் ரூ.391 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆர்ஐஎன்எல் நிறுவனம் என்பது விசாகப்பட்டினம் உருக்காலை என்றும் அழைக்கப்படுகிறது