தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 2வது முறையாக விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 2வது முறையாக விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,630 ஆகவும், சவரன், ரூ.37,040 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.4,620ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 வீழ்ச்சி அடைந்து, ரூ.36,960ஆக குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,630ஆக விற்கப்படுகிறது.
இந்த வாரம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. திங்கள்கிழமை 64 ரூபாய் குறைந்தது. ஆனால், நேற்று ரூ.64 உயர்ந்தது. இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்து சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்வு குறித்த அறிவிப்பு வரும் வரை தங்கத்தின் விலையில் நிலையற்ற போக்கு காணப்படும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
வெள்ளி விலையில் மாற்றமில்லை வெள்ளி கிராம் ஒன்று, ரூ.61.80ஆகவும், கிலோ ரூ.61,800 ஆகவும் விற்கப்படுகிறது