
காதிபொருட்கள் கூட இனி ஆன்லைனில் ........புதிய இணையதளம் அறிமுகம்.....!!!
தற்போது , அனைத்து பொருட்களையும், ஆன்லைன் மூலமாகவே வாங்க முடிகிறது. முன்பெல்லாம் எது வேண்டுமோ , அதை நாம் நேராக சென்றுதான் வாங்குவோம். ஆனால் தபோது, வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவை பற்றிப் சொல்ல வேண்டும் என்றால், இனி வரும் காலங்களில் கிராமப்புற மக்கள் கூட ஆன்லைன் மூலமாகவே அனைத்து பொருட்களையும் வாங்கும் நிலைமை ஏற்படும் என தெரிகிறது.
இதனை தொடர்ந்து தற்போது, காதி நிறுவனம் தங்களது பொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் நோக்கில் புதிய இணையதளத்தை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், காதி பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் இ-காமர்ஸ் துறை மூலம் காதி விற்பனையை அதிகப்படுத்த இந்த இணையதளம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் புகைப்படங்கள் மற்றும் கூரியர் ஒப்பந்தம் உட்பட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டதாக , காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் தலைவர் வி.கே.சக்சேனா தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதள பயன்பாடு குறித்த முழு விவரம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.