What is Amrit Kaal in Budget 2023: மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட ‘அமிர்த காலம்’ என்றால் என்ன?

By SG BalanFirst Published Feb 1, 2023, 6:55 PM IST
Highlights

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கும்போது ‘நான் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். இதுதான் அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்’ என்று குறிப்பிட்டார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று சொல்லியே தொடங்கினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் சுமார் ஒன்றரை மணிநேரம் பட்ஜெட் உரையை வாசித்தார்.

அவர் உரையைத் தொடங்கும்போது ‘நான் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். இதுதான் அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்’ என்று குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் மட்டுமின்றி தனது உரை முழுவதிலும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தினார் நிர்மலா சீதாராமன்.

Union Budget 2023 on Education: செயற்கை நுண்ணறிவு முதல் செயற்கை வைரம் வரை! அசத்தும் கல்வித்துறை பட்ஜெட்!

அமிர்த காலம் என்றால் என்ன?

இந்தியா 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்தது. 2022ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது. 2023 முதல் 2047ஆம் ஆண்டு வரையான இந்த 25 ஆண்டு காலம்தான் அமிர்த காலம் என்று அழைக்கப்படுகிறது.

‘அமிர்த காலம்’ என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. 2021ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர இந்தியா தனது 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இதனைக் குறிப்பிட்டுப் பேசியபோது. 75ஆம் ஆண்டு பூரத்தியானதும் இந்தியாவின் அமிர்த காலம் தொடங்குகிறது என்று தெரிவித்தார்.

இந்த அமிர்த காலத்தில் புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. இதற்கான அடித்தளத்தை அமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

click me!