மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செயது உரையாற்றி வருகிறார்.. இந்த பட்ஜெட் குறிப்பிடத்தக்க பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட் 2024 சிறப்பம்சங்கள், முக்கிய அறிவிப்புகள்
undefined
புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.15000 முதல் ரூ.1 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
20 லட்சம் இளைஞர்களுக்கு வழங்க புதிய திட்டம் உருவாக்கப்படும்.
பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
1 கோடி இளைஞர்களுக்கு ரூ.5000 மாதாந்திர உதவித்தொகையுடன் இண்டர்ன்ஷிப் திட்டம்.
பீகார் மாநிலம் கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும்.
பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
பீகாரில் பாலங்கள், சாலைகள் சமைக்க ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆந்திராவில் தலைநகர் நிதி சார்ந்து ரூ.5000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
முத்ரா கடன் வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி கூடுதல் வீடுகள்
விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு
கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி கூடுதல் வீடுகள்
தொழில்துறை தொழிலாளர்களுக்கான தங்குமிடத்துடன் கூடிய வாடகை வீடு
நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு வசதிகளை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடி
1 கோடி விவசாயிகள் ‘இயற்கை விவசாயத்துக்கு’ மாற்றம்
5 மாநிலங்களில் கிஷன் கிரெடிட் கார்டுகள்
விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி
கிழக்கு பிராந்தியத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு முன்னுரிமை
26,000 கோடியில் கிழக்கு இந்தியாவில் புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் கட்டப்படும்.
100 கோடி வரையிலான கடன்களை செயல்படுத்த புதிய MSME உத்தரவாதத் திட்டம் உருவாக்கப்படும்.
அடமானம் இல்லாத கடனுக்காக MSME கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வர உள்ளது
SMA (சிறப்புக் கணக்கு) நிலையில் இருக்கும் போது MSME களுக்கு வங்கிக் கடன் வசதிக்கான புதிய வழிமுறை கொண்டு வரப்படும்.
முத்ரா கடன்களின் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும்
நகர்ப்புறங்களில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் சில மருந்துகளுக்கு சுங்கவரி குறைக்கப்படுகிறது.
புற்றுநோய்க்கு பயன்படுத்தும் மேலும் 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படும்
மொபைல் போன், உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15% ஆக குறைக்கப்படும்.
விண்வெளி, பாதுகாப்பு, தொலைதொடர்பு ஆகிய துறைகளில் 25 முக்கிய தாது பொருளுக்கு இறக்குமதி வரி விலக்கு.
சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.
தங்கம், வெள்ளிக்கான சுங்கவரி 6% ஆகவும், பிளாட்டினத்திற்கான சுங்கவரி 6.4% சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ. 50,000லிருந்து ரூ. 75,000ஆக அதிகரிப்பு
புதிய வரி அடுக்குகள் - ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை, ரூ. 3-7 லட்சம் 5%, ரூ. 7-10 லட்சம் 10%, ரூ. 10-12 லட்சம் 15%, ரூ. 12-15 லட்சத்துக்கு 20% மற்றும் அதற்கு மேல் ரூ. 15 லட்சம் 30% வரி விதிக்கப்படும்.