மத்திய பட்ஜெட் 2024: விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி! இயற்கை விவசாயத்தில் 1 கோடி இளைஞர்கள்!

By SG Balan  |  First Published Jul 23, 2024, 11:31 AM IST

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட்டை தயாரித்துள்ளதாகக் கூறிய நிதி அமைச்சர், "விவசாயத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று கூறினார்.


2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

2024-25-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவருகிறார்.  3வது முறையாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாக உள்ளது. மோடி ஆட்சிக்கு மக்கள் 3வது முறையாக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி, பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.

Tap to resize

Latest Videos

undefined

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட்டை தயாரித்துள்ளதாகக் கூறிய நிதி அமைச்சர், "விவசாயத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று கூறினார்.

மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் என்ன?

வேளாண் துறையில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கப்படும். கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் குறித்து டிஜிட்டல் முறையில் சர்வே மேற்கொள்ளப்படும். பருப்பு வகைகள், கடுகு, நிலக்கடலை, சூரிய காந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கல்வி,  திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு மத்திய பட்ஜெட்டில் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. 4.1 கோடி இளைஞர்கள் பயனையும் வகையில் 5 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வேளாண் உற்பத்தித் திறனை மேம்படுத்த அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள்  இயற்கை வேளாண்மையில் ஈடுபடுத்தப்படுவரா்கள் எனவும் நிதி அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Budget 2024 LIVE: இன்று காலை 11 மணிக்கு தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

click me!