நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு என்ன ஊட்டி விட்டார் தெரியுமா?

Published : Jul 23, 2024, 10:54 AM ISTUpdated : Jul 23, 2024, 10:57 AM IST
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு என்ன ஊட்டி விட்டார் தெரியுமா?

சுருக்கம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது பட்ஜெட்டாகத் தாக்கல் செய்கிறார்,

பணவீக்கம் மற்றும் வேலை நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று நடுத்தர வர்க்கத்தினரும் மாத சம்பளம் பெறுவோரும் எதிர்பார்க்கின்றனர்.

Union Budget 2024: பட்ஜெட்டில் எது விலை உயர்ந்தது? எது விலை மலிவானது? முழு விபரம்!

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக பட்ஜெட் குறித்து நேற்று பேசிய மோடி, “ இது அமுத காலத்திற்கான முக்கியமான பட்ஜெட். எங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான திசையை பட்ஜெட் தீர்மானிக்கும். இந்த பட்ஜெட் நமது 'விக்சித் பாரத்' கனவுக்கு வலுவான அடித்தளமாக அமையும்.” என்று கூறினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, நிர்மலா சீதாராமனுக்கு தயிர்-சர்க்கரையை ஊட்டிவிட்டார். இது நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குவதற்காகன் வாழ்த்துகளை கூறும் வழக்கமான நடைமுறையாகும்.

இந்திய பொருளாதாரத்தை வடிவமைத்த 5 வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்கள்.. ஓர் பார்வை..

இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2024 மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Budget 2025 Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நாள் சேலையில் மறைந்திருக்கும் ரகசியம்!!
Budget 2025 LIVE Updates: மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்ட தேவையில்லை