Union Budget 2024: வருமான வரியில் நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிப்பு! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

By SG Balan  |  First Published Jul 23, 2024, 10:46 AM IST

2024-25ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியில் நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியில் நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா என மாதச் சம்பளம் பெறும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2024-25ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 3வது முறையாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாக இது உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.

Latest Videos

undefined

இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் கொண்டுவர அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், புதிய வரி முறையில், வருமான வரியில் நிலையான கழிவு ரூ.50,000 இல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி பேர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுபடுவார்கள் என்று நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Budget 2024 LIVE: இன்று காலை 11 மணிக்கு தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

புதிய வருமான வரி முறையில் மாற்றம்:

புதிய வருமான வரி முறையில் 3 லட்சம் ரூபாய் வரையான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் ரூ.7 லட்சம் வரை (முன்பு ரூ.6 லட்சம் வரை) வருமானம் கொண்டவர்கள் 5% வரி செலுத்தினால் போதும். ரூ. 7 லட்சத்திற்கு மேல் ரூ. 10 லட்சம் வரை (முன்பு 6-9 லட்சம்) 10% வரி விதிக்கப்படுகிறது. ரூ.10 லட்சத்துக்கு மேல் (முன்பு ரூ.9 லட்சத்துக்கு மேல்) ரூ.12 லட்சம் வரையான வருமானத்துக்கு 15% வரி வசூலிக்கப்படும்.

ரூ. 12 லட்சத்துக்கு மேல் ரூ.15 லட்சம் வரையான வருமானத்துக்கு 20%, ரூ. 15 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30% வருமான வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த இரண்டிலும் மாற்றம் இல்லை.

பழைய வருமான வரி முறை:

இப்போது நடைமுறையில் உள்ள பழைய வருமான வரி முறையின் கீழ், ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது.

ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வரி வருமானம் ஈட்டினால், 20% வரி வசூலிக்கப்படுகிறது. 10 லட்சத்துக்கும் மேலான வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படுகிறது.

60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 3 லட்சம் ஆகும். இதேபோல 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சம் ஆகும்.

பழைய வரி முறையின் கீழ், தனிநபரின் நிகர வருமானம் ரூ. 5 லட்சம் வரை இருந்தால், பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி பெறலாம். தள்ளுபடி தொகை வருமான வரியில் 100 சதவீதம் அல்லது ரூ 12,500 ஆக இருக்கும்.

Union Budget 2024: பட்ஜெட்டில் எது விலை உயர்ந்தது? எது விலை மலிவானது? முழு விபரம்!

click me!