மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.3,300 கோடி நிதி ஒதுக்கீடு... தமிழக பட்ஜெட்டில் தகவல்..

By Ramya sFirst Published Feb 19, 2024, 12:42 PM IST
Highlights

2024-25ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அதன்படி பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளீயிட்டுள்ளார். குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.

தமிழகத்தில் இலவச Wifi.. 500 புதிய மின் பேருந்துகள்- தமிழக பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு

2024-25 தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள் 

  • தமிழின் இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்கு சென்றடையும் வகையில் அவற்றை மொழிபெயர்க்க ரூ.கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • தேமதுர தமிழோசை உலகம் முழுவதும் பரவிட செய்யும் வகையில் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படும். 
  • தமிழ் மொழியின் வளம், தமிழரின் தொன்மை குறித்து எதிர்கால தலைமையினருக்கும் கொண்டு சேர்த்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின் பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். 
  • அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். 
  • தமிழ்நாட்டில் புதிதாக 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். ஜெர்மனி நாட்டின் நிதி பங்களிப்புடன் 500 சிற்றுந்துகளை வாங்க திட்டம்.
  • மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு ரூ.3,050 கோடி நிதி ஒதுக்கப்படும். 
  • மாணவர்களுக்கான இலவச பேருந்து திட்டத்திற்கு ரூ. 1521 கோடி நிதி ஒதுக்கப்படும். 
  • 20230-ம் ஆண்டிற்குள் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  • ஆதி திராவிட இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் கடன் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட இளைஞர்கள் 33% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். 
  • வானிலையை துல்லியமாக அறிய ரூ.56 கோடியில் 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும். 
  • ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும்
  • மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 92 லட்சம் பயனாளிகளில் 26 லட்சம் ஆதி திராவிடர்களும், 1.6 லட்சம் பழங்குடியினரும் அடங்குவர். குறிப்பாக 79 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். 2024-25ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்காக 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கோவையில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ரூ.1100 கோடி நிதி ஒதுக்கீடு. 
  • அடையாறு ஆற்றை சீரமைக்க தனியார் பங்களிப்புடன் ரூ. 1500 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். 

மகளிர் உரிமைத்தொகை : பட்ஜெட்டில் குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..

click me!