தமிழகத்தில் இலவச Wifi.. 500 புதிய மின் பேருந்துகள்- தமிழக பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Feb 19, 2024, 12:38 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்திற்கு 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும், மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது 

தமிழக சட்டப்பேரவையில் 2024 - 2025ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

  • பள்ளிகளை புதுப்பித்தல், மேம்படுத்துதல், கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • சிங்கார சென்னையை உருவாக்கும் நோக்கத்தில் தீவுத்திடலில் நகர்ப்புற பொதுச் சங்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகியவை ரூ. 104 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரை பகுதிகள் 100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும் 

  •  மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • தமிழகத்திற்கு 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும்
  • மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்திடும் சட்ட முன்னறிவு நடப்பு கூட்டத்துறையில் அறிமுகப்படுத்தப்படும்.
  • கன்னியாகுமரி நாகப்பட்டினம் ராமநாதபுரம் தஞ்சாவூர் மயிலாடுதுறை திருவாரூர் செங்கல்பட்டு விழுப்புரம் திருவள்ளூர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தூண்டில் வளைவு மீன் இறங்குதளம் தூர்வாருதல் செயற்கை மீன் உறைவிடங்கள் போன்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

  •  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள்
  • புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலை 18 மீட்டராகவும், டாக்டர் ராதாகிருணன் சாலை 30.5 மீட்டராகவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கலில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1328 கோடி மதிப்பிலான பணிகள் முடிவுற்று 1659 கோடியிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
  • வரும் நிதியாண்டில் ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அம்ருத் 2.0 திட்டத்தில் 4,942 கோடி மத்திய அரசிடம் இருந்தும், 9047கோடி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

  • 2024-25ஆம் ஆண்டில் பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகள் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
  • மகாத்மா தேசிய ஊராக வேலை உறுதித் திட்டத்தில் 92 லட்சம் பயனாளிகளில் 26 லட்சம் ஆதி திராவிடர்களும், 1.6 லட்சம் பழங்குடியினரும் அடங்குவர். குறிப்பாக 79லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். 2024-25ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்காக 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
click me!