Nirmala Sitharaman: ‘டெட்டால் போட்டு வாயை கழுவுங்க’ – மக்களவையில் நிர்மலா சீதாராமன் காட்டம்

By SG Balan  |  First Published Feb 11, 2023, 9:43 AM IST

ஊழல் பற்றிப் பேசும் காங்கிரஸ் எம்பிக்கள் தங்கள் வாயை டெட்டால் ஊற்றிக் கழுவவேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியினர் டெட்டால் போட்டு வாயைக் கழுவ வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது எதிர்க்கட்சியினர் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியை மிகவும் காட்டமாகத் தாக்கிப் பேசினார். “ஊழல் குறித்துப் பேசுவது யார்? காங்கிரஸ் கட்சியா? காங்கிரஸ்காரர்கள் ஊழலைப் பற்றி பேசுவதுதான் வினோதமாக இருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் டெட்டால் ஊற்றி வாயைக் கழுவுங்கள். ஆனால் டெட்டால் ஊற்றிக் கழுவினாலும் சுத்தமாகிவிடாது.” என்று சாடினார்.

பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு! பட்ஜெட் உரையில் சிரிப்பலை!

You (Congress) talking about corruption. C'mon go first wash your face with dettol before talking about corruption: UFM Nirmala Sitharaman pic.twitter.com/1bEaY3Ll49

— Megh Updates 🚨™ (@MeghUpdates)

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவை விமர்சிக்க வேண்டியது... அதற்கு நாங்கள் பதில் கூற முன்வரும்போது, ஒன்று சலசலப்பை ஏற்படுத்துகிறார்கள் அல்லது சபையை விட்டே வெளியேறிவிடுகிறார்கள்” என்று குறை கூறினார்.

“அண்மையில் ராஜஸ்தான் முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்தார். தவறு நேர்வது இயல்புதான். ஆனால் இப்படி ஒரு தவறு இனி யாரும் செய்யக்கூடாது என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பட்ஜெட் தாக்கல் செய்த அம்மாநில முதல்வர்  அசோக் கெடாட், தவறுதலாக முந்தைய ஆண்டின் பட்ஜெட்டையே 8 நிமிடங்கள் வரை வாசித்தார். உறுப்பினர்கள் சந்தேகம் எழுப்பியதும், வருத்தம் தெரிவித்துவிட்டு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்தார்.

PM Modi on DMK: ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விளாசிய பிரதமர் மோடி

click me!