அடுத்த பாயாசம் அமுல் பேபிக்கா... ‘புல்லி கேங்’ பூர்ணிமா வீசிய காதல் வலையில் வசமாக சிக்கிய விஷ்ணு

By Ganesh A  |  First Published Nov 16, 2023, 3:34 PM IST

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நிக்சன் - ஐஷூவின் காதல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது புது காதல் ஜோடி ஒன்று உருவாகி இருக்கிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் சண்டைகளுக்கு பஞ்சமில்லாததை போல் காதலுக்கும் பஞ்சமில்லாத சீசனாக மாறி இருக்கிறது. இந்த சீசனில் ஏற்கனவே மணி - ரவீனா, நிக்சன் - ஐஷூ என இரு காதல் ஜோடிகள் வலம் வந்துகொண்டிருந்தன. இதில் நிக்சன் - ஐஷூவின் காதல் கடுப்பேற்றும் வகையில் இருந்ததால் கடந்த வாரம் ஐஷூவை எலிமினேட் செய்து காதல் ஜோடிகளை பிரித்துவிட்டார் பிக்பாஸ்.

இதையடுத்து ஆட்டம் சூடுபிடிக்கும் என பார்த்தால், தற்போது மற்றொரு காதல் ஜோடி உருவாகி இருக்கிறது. அது வேறுயாருமில்லை பூர்ணிமா - விஷ்ணு தான். முதலில் சரவண விக்ரம் மீது கிரஷ் இருப்பதாக கூறி வந்த பூர்ணிமா, தற்போது விஷ்ணுவிடம் தனக்கு லவ் ஃபீலிங் இருப்பதாக கூறி இருக்கிறார். இதுகுறித்த புரோமோ காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதில் எங்க வீட்ல நான் எந்த பொண்ண காட்டுனாலும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க என்றும் இப்போ வரை தான் சிங்கிளாக இருப்பதாகவும் விஷ்ணு கூறுகிறார். இதையடுத்து யார் தாங்க நீங்க என பூர்ணிமா கேட்க, விஷ்ணு விஜய் என வெட்கத்தோடு சொல்கிறார் விஷ்ணு. இதைப் பார்த்ததும் இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கு, எனக்கு புடிச்சிருக்கு என கூறும் பூர்ணிமா, தனக்கு பீலிங் இருக்கிறது என ஓப்பனாகவே சொல்லிவிடும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் புல்லி கேங் வீசிய வலையில் விஷ்ணு சிக்கிக் கொண்டதாகவும், அவர்களின் அடுத்த பாயாசம் விஷ்ணுவுக்கு தான் என்றும் கிண்டலடித்து வருகின்றனர். மறுபுறம் இதை டைட்டில் வின்னர் சரவண விக்ரம் பார்த்தால் என்ன ஆகும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் மற்றுமொரு காதல் ஜோடி உருவாகி உள்ளது உறுதியாகி இருக்கிறது.

of

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/ePAgw0e2M2

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்...  அட்டர் பிளாப்... பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ஜப்பான் படத்தால் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா?

click me!