நிக்சன் வினுஷாவை உருவகேலி செய்ததை கமல் கேள்வி கேட்காத நிலையில், அதேபோல் தெலுங்கு பிக்பாஸில் நடந்த விஷயத்தை நாகார்ஜுனா எப்படி கையாண்டுள்ளார் என்கிற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ள கமல்ஹாசன், இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது நடைபெற்று வரும் 7-வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வந்தாலும், இதற்கு முந்தைய சீசன்களைப் போல் இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்குவதில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரத்தை கமல் கையாண்ட விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமல் அவரை வெளியே அனுப்பியது விவாதத்துக்குள்ளான நிலையில், மறுவாரம் வந்து தான் பேச வாய்ப்பளித்ததை பிரதீப் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என சப்பைகட்டு கட்டிவிட்டு சென்றார். அதோடு, கடந்த வாரம் பிரதீப் விவகாரத்தை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது வினுஷா பற்றி நிக்சன் சொன்ன கொச்சையான உருவகேலி கமெண்ட் தான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனை வார இறுதியில் கமல் கேட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒன்று நடக்காதது போலவே அதனை அசால்டாக கடந்துவிட்டு சென்றார் கமல். இதனால் கமல் மீதுள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. நிக்சன் வினுஷாவை உருவகேலி செய்ததுபோல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதிலும் ஆண் போட்டியாளர் ஒருவர் பெண்ணின் உடல் வடிவத்தை கேலி செய்யும் விதமாக பேசி இருக்கிறார்.
இதை சம்பந்தப்பட்ட பெண் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அதன் தொகுப்பாளரான நாகார்ஜுனா அதனை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட ஆண் போட்டியாளருக்கு செம்ம டோஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரைப் பார்த்து கமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
தெலுங்கு பிக்பாஸை பொறுத்தவரை நாகார்ஜுனா ஒரு எபிசோடு கூட மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவாராம். அதை வைத்து தான் அவர் வார இறுதியில் என்னென்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்வாராம். ஆனால் கமல் அப்படியெல்லாம் செய்யாமல் பிக்பாஸ் குழுவினர் சொல்லும் கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
should learn how to host BB from 👊
Kamal should have questioned like this 😴 pic.twitter.com/uWI272WaKz
இதையும் படியுங்கள்... புரோமோ பொறுக்கினு திட்டிய தினேஷ்... அடிதடியில் இறங்கிய விஷ்ணு - கலவர பூமியாக மாறிய பிக்பாஸ் வீடு