போடா அமுல்பேபி... பிக்பாஸ் பேச்சை கேட்டு விஷ்ணு உடன் சண்டை போட்ட தினேஷ் - அனல்பறக்கும் புரோமோ

Published : Nov 15, 2023, 09:53 AM ISTUpdated : Nov 15, 2023, 09:55 AM IST
போடா அமுல்பேபி... பிக்பாஸ் பேச்சை கேட்டு விஷ்ணு உடன் சண்டை போட்ட தினேஷ் - அனல்பறக்கும் புரோமோ

சுருக்கம்

பிக் பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கால் விஷ்ணு உடன் தினேஷ் சண்டை போட்ட புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு சீசனாக உள்ளது. முதல் வாரத்தில் இருந்து பல்வேறு சண்டை, சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தற்போது 8-வது வாரத்தில் உள்ளது. இதில் ரசிகர்களின் மனம்கவர்ந்த போட்டியாளராக இருந்த பிரதீப், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

பிரதீப்பால் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார் கமல்ஹாசன். பிரதீப்பின் எவிக்‌ஷனால் ரசிகர்கள் கொந்தளித்ததை போல் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையேயும் பிரச்சனை வெடித்தது. இதனால் கடந்த வாரம் முழுவதும் மாயாவின் புல்லி கேங்கிற்கும் விசித்ரா, அர்ச்சனா ஆகியோருக்கும் இடையே சண்டை நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து வார இறுதியில் கமல் இருதரப்பையும் எச்சரித்ததோடு, இனி பிரதீப் விவகாரத்தை பேசக்கூடாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் போட்டியாளர்கள் கப்சிப் என அடங்கிப் போய் உள்ளனர். இந்த வாரம் முழுக்க ஆட்டம் மந்தமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த பிக்பாஸ் தற்போது தினேஷுக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்து விஷ்ணு உடன் சண்டை போட விட்டுள்ளார்.

பிக்பாஸின் பேச்சை கேட்டு, விஷ்ணுவிடம் மல்லுக்கட்டும் தினேஷ், அவரை வெறுப்பேற்றும் விதமாக போடா அமுல்பேபி என சொல்ல, அதற்கு அவர் போடா நரி என பதிலடி கொடுக்க இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமாகி உள்ளது. இதுமட்டுமின்றி போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்துகொண்டு, ஒருவரைப்போல் இன்னொருவர் உடையணிந்து கொண்டு, அவர்களைப் போல் இமிடேட் செய்ய வேண்டும் என்கிற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் விஷ்ணு போல் வேடமிட்டுள்ள மாயா, அவர் சண்டை போடுவதை இமிடேட் செய்யும் காட்சிகளும் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்...  காதலால் இணையும் சின்னத்திரை நட்சத்திரங்கள்... பிரபல ஹீரோயினை கரம்பிடிக்க ரெடியான சுந்தரி சீரியல் நடிகர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?