காதலால் இணையும் சின்னத்திரை நட்சத்திரங்கள்... பிரபல ஹீரோயினை கரம்பிடிக்க ரெடியான சுந்தரி சீரியல் நடிகர்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நடித்து வரும் அரவிஷ், தான் பிரபல சீரியல் ஹீரோயினை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
Harika, Aravish
சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. மெட்டி ஒலியில் நடித்த சேத்தன் - தேவதர்ஷினி தொடங்கி, ராஜா ராணி சீரியல் ஆலியா மானசா - சஞ்சீவ், சரவணன் மீனாட்சி தொடர் மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா, திருமணம் சீரியல் சித்து - ஸ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த பட்டியலில் விரைவில் புதிதாக ஒரு ஜோடி இணைய உள்ளது.
Aravish, Harika Love
அவர்கள் வேறுயாருமில்லை, சன் டிவி சீரியல் பிரபலங்களான அரவிஷ் - ஹரிகா ஜோடி தான். இதில் அரவிஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இதில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான சுந்தரி சீரியலின் முதல் பாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் ஹீரோ கார்த்திக்கின் நண்பனாக கிருஷ்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அரவிஷ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Aravish, Harika Love Marriage
தற்போது சுந்தரி சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பல்வேறு புது கேரக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அரவிஷின் கிருஷ்ணா கேரக்டர் அப்படியே இடம்பெற்று உள்ளது. இவர் சீரியல் நடிகை ஹரிகாவை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளார். கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி, குடும்பத்தினர் சம்மதத்தோடு திருமணத்துக்கு ரெடியாகி உள்ளனர்.
Aravish, with her lover Harika
அரவிஷின் காதலியான ஹரிகா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்காக ஒன்றாக ஷாப்பிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இவர்களது திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்... பேட்ட பராக்! உலக கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க மும்பையில் கெத்தாக வந்திறங்கிய ரஜினியின் Exclusive போட்டோஸ்