பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவரை கேப்டன் தினேஷ் புரோமோ பொறுக்கி என அழைத்ததால் இருவருக்கும் இடையே சண்டை முற்றி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷூ ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் வெளியேற, பிரபல போட்டியாளரான பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
பிரதீப்பின் ரெட் கார்டு எவிக்ஷனுக்கு பின்னர் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக டல் அடிக்க தொடங்கி உள்ளது. இந்த ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க பல்வேறு டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ். அந்த டாஸ்க்குகளும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் தற்போது சீக்ரெட் டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டுள்ளார் பிக்பாஸ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி இந்த சீக்ரெட் டாஸ்க் இந்த வார கேப்டனான தினேஷுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர், இந்த டாஸ்க் கொடுத்ததை அடுத்து விஷ்ணு உடன் சண்டை போட்டுள்ளார். அவரை வாடா, போடா என ஒருமையில் பேசி வம்புக்கு இழுக்க, இதைக்கேட்டு டென்ஷன் ஆன விஷ்ணு அவரிடம் எகிறி எகிறி சண்டை போட்ட காட்சிகள் முதல் புரோமோவில் இடம்பெற்று இருந்தன.
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவிலும் இருவரின் சண்டை காட்சிகள் தான் இடம்பெற்று உள்ளன. இதில் விஷ்ணுவை புரோமோ பொறுக்கி என தினேஷ் திட்டுகிறார். இதைக்கேட்டு கடுப்பான விஷ்ணு, தினேஷ் அமர்ந்திருந்த சேரை எட்டி உதைத்துவிட்டு, இன்னொரு முறை இப்படி பேசுனா இதேமாதிரி உனக்கு மிதி விழும் என எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இவர்களின் சண்டையால் பிக்பாஸ் வீடே கலவர பூமியாக மாறி உள்ளது.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/hJ5cdLIxn4
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாமியார்.. அபிராமி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியலில் செம டுவிஸ்ட்