பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடியாக வலம் வரும் நிக்சனும், ஐஷுவும் முத்தம் கொடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உருவான காதல் ஜோடிகள் ஏராளம். முதல் சீசனில் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் 7-வது சீசன் வரை காதலுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு சீசனிலும் ஒரு லவ் டிராக் ஓடுவதை காண முடிகிறது. முதல் சீசனில் ஓவியா - ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா - மகத், மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா, நான்காவது சீசனில் ஷிவானி - பாலாஜி, ஐந்தாவது சீசனில் அமீர் - பாவனி, ஆறாவது சீசனில் ஷிவின் - கதிரவன் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போது நடைபெற்று வரும் ஏழாவது சீசன் காதல் ஜோடிகள் நிரம்பி வழிகிறது. இந்த சீசனில் இதுவரை மூன்று காதல் ஜோடிகள் தனித்தனியாக ரொமான்ஸ் செய்து வருகின்றனர். முதலில் மணி - ரவீனா, இவர்கள் இருவரும் வெளியில் இருக்கும்போதே நெருங்கி பழகி வந்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டுக்கு வந்த பின்னர் ஜோடியாகவே சுற்றி வருகின்றனர். இவர்களைப் பார்த்து இன்னும் இரண்டு ஜோடி உருவாகி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதில் ஒன்று பூர்ணிமா - சரவண விக்ரம், மற்றொன்று நிக்சன் - ஐஷு. முதல் இருவாரங்கள் மணி - ரவீனா தான் அதிகளவில் ரொமான்ஸ் செய்து சுற்றி வந்தனர். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நிக்சனும் ஐஷுவும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மைக்கை கழட்டி போட்டு பேசுவதை பிக்பாஸ் பலமுறை கண்டித்தாலும், அதனையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.
இந்த ரொமான்ஸ் அடுத்தகட்டமாக கிஸ் வரை சென்று இருக்கிறது. நிக்சன் சுமால் பாஸ் வீட்டிலும், ஐஷு பிக்பாஸ் வீட்டிலும் இருப்பதால், இருவரும் கண்ணாடி அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஐஷு காத்துவாக்குல ஒரு கிஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கண்ணாடி மட்டும் இல்லேனா என்ன ஆகிருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ இதென்ன புதுவித மருத்துவ முத்தமா இருக்கே என கிண்டலடித்து வருகின்றனர்.
losing his plot same as
They r creating unwanted content.
Idhalam true ah illa, looks very cringe.
Both are breaking the rules of Mike. needs to warn this.
Concentrate on ur game 😡 pic.twitter.com/xDEjn8bsmj
இதையும் படியுங்கள்... 5 பேர உள்ள அனுப்பிட்டு... 2 பேரை வெளியேற்றிய பிக்பாஸ்.! வைல்டு கார்டு என்ட்ரியால் நடந்த டுவிஸ்ட்? முழு விவரம்!