குளிக்கிற ஆர்வத்தில் டாப்பா போட மறந்த விஷ்ணு... கதவை திறந்து பார்த்து ஷாக் ஆன பூர்ணிமா - பிக்பாஸ் அலப்பறைகள்!

By Ganesh A  |  First Published Oct 25, 2023, 2:51 PM IST

பிக்பாஸ் வீட்டில் தான் குளிப்பதை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி விஷ்ணு மாயாவிடம் புலம்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மாயா, பூர்ணிமா, வினுஷா, விசித்ரா, ரவீனா, ஐஷூ, அக்‌ஷயா, அனன்யா ராவ், யுகேந்திரன், பவா செல்லதுரை, விஜய் வர்மா, சரவண விக்ரம், பிரதீப் ஆண்டனி, மணிச்சந்திரா, ஜோவிகா, நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு விஜய் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் இந்த சீசன் மட்டும் இரண்டு வீடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக்பாஸ், சுமால் பாஸ் என இரு வீடுகளாக பிரிக்கப்பட்டு, சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சீசன்களை விட இந்த சீசன் முதல் வாரத்தில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பப்பட்டாலும், ஓடிடியில் 24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் டிவியில் மிஸ் ஆகும் விஷயங்களையும் ஓடிடியில் பார்க்கும் ரசிகர்கள் அதில் சுவாரஸ்யமானவற்றை கட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், தான் பாத்ரூமில் டாப்பால் போடாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி விஷ்ணு மாயாவிடம் புலம்புகிறார். அதற்கு டாப்பா போடாம உங்கள யார் குளிக்க சொன்னா என பூர்ணிமா விஷ்ணுவிடம் கேட்க, அதற்கு அவர் தனக்கு அநியாயம் நடந்துவிட்டதாக கூறி புலம்புகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் வேற நடக்குதா என அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

accidentally opened the bathroom door when was taking a bath😂 pic.twitter.com/iUzVW7aON7

— Akshay (@Filmophile_Man)

இதையும் படியுங்கள்... Keerthy Suresh: விமானம் தாமதம் ஆகும் போது... விமான நிலையத்தில் நேரத்தை கடத்த டிப்ஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

click me!