டாஸ்க் கொடுத்து காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்... மணி - ரவீனா பிரேக் அப்?

Published : Oct 25, 2023, 12:54 PM IST
டாஸ்க் கொடுத்து காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்... மணி - ரவீனா பிரேக் அப்?

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடியாக வலம் வரும் மணி - ரவீனா இருவரும் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கால் சண்டையிட்டுக்கொண்ட புரோமோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் மணி - ரவீனா. இவர்கள் இருவரும் கேம் விளையாட வந்தார்களா இல்லை ரொமன்ஸ் பண்ண வந்தார்களா என்கிற கேள்வி அங்குள்ள போட்டியாளார்களுக்கே உள்ளது. அந்த அளவுக்கு இருவரும் எப்போதும் ஜோடிப்புறாக்கள் போல் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். இதனால் கடுப்பான ஹவுஸ்மேட்ஸ் இதை காரணமாக வைத்தே இருவரையும் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்துள்ளனர்.

இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் தான் பிரச்சனை என்று, மணியை தூக்கி சுமால் பாஸ் வீட்டில் போட்டு பார்த்தார் கேப்டன் பூர்ணிமா. ஆனால் அங்கு போன பின்னர் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் ஓவராகிவிட்டது. இந்த நிலையில், பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் மணி ரவீனா இடையே சண்டை வெடித்துள்ளது. இவர்களது ரொமான்ஸை பார்த்து கடுப்பாகி தான் பிக்பாஸ் அப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட இருவரின் வீடியோக்களை பார்த்து, அதில் யாருடைய வீடியோ பிடித்திருந்தது என நினைப்பவருக்கு லைக்கும், பிடிக்காதவருக்கு டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும். இதில் ரவீனாவுக்கு மணி மற்றும் பிரதீப் வீட்டில் இருந்து வந்த வீடியோவை ஒளிபரப்பி இருந்தனர். இதில் பிரதீப்பின் வீடியோ பிடித்ததாக கூறி அவருக்கு லைக் கொடுத்துவிட்டார் ரவீனா.

அவர் விளையாட்டை விளையாட்டாக விளையாடியது மணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் தனக்கு லைக் கொடுக்காததால் கடுப்பான மணி, அவருடன் சண்டை போட்டுள்ள புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதை அங்கிருந்து பார்த்த கேப்டன் பூர்ணிமா, ரவீனா கேமை சரியாக விளையாடியதாக பாராட்டி பேசியதோடு, மணி மூளையே இல்லாத முட்டாப்பய என சாடி உள்ளார். இந்த புரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மணியும், ரவீனாவும் பிரேக் அப்-பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... வசூலில் சரிவை சந்தித்ததா லியோ?... உலகளவில் 6 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு? முழு விவரம் இதோ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்
பாரு - கம்ருதீன் கேம் ஓவர்... ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி - பிக் பாஸ் ரசிகர்கள் செம ஹாப்பி..!