காமெடிங்கிற பேர்ல கடுப்பேத்துறாரு... கமல் முன்னிலையில் ஹவுஸ்மேட்ஸிடம் கும்மாங்குத்து வாங்கிய கூல் சுரேஷ்

By Ganesh A  |  First Published Oct 22, 2023, 1:39 PM IST

பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் செய்யும் காமெடிகள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் குற்றம் சாட்டினர்.


தமிழ் படங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக காமெடியனாக நடித்து வந்தாலும் நடிகர் கூல் சுரேஷுக்கு அடையாளம் கொடுத்தது வெந்து தணிந்தது காடு படம் தான். அப்படத்தில் அவர் சிறிய வேடத்தில் கூட நடிக்காவிட்டாலும், அதற்காக தாறுமாறாக புரமோஷன் செய்தார். அதற்கு காரணம் அவர் சிம்பு மீது வைத்துள்ள அன்பு தான். சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், செய்த புரமோஷனும், வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷும் ஒரு போட்டியாளராக களமிறங்கினார். அவர் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை கிண்டலடித்துக் கொண்டு ஜாலியாக விளையாடி வருகிறார். இந்த நிலையில், இன்றைய எபிசோடில், கூல் சுரேஷ் செய்யும் காமெடிகள் அனைத்து கடுப்பேத்தும் வகையில் இருப்பதாக கூறி சக போட்டியாளர்கள் அனைவரும் கமல்ஹாசனிடமே ஓப்பனாக கூறிவிட்டனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது, பூர்ணிமா, நிக்சன், விசித்ரா ஆகியோர் கூல் சுரேஷ் காமெடி என்கிற பெயரில் பிறரின் மனதை புண்படுத்தும் வகையில் பேசி வருவதை சுட்டிக்காட்டினர். இதைக்கேட்ட கமல்ஹாசன், போட்டியாளர்கள் யாரும் உங்களுக்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை. எனக்கு எல்லாமே கேட்கும், நானும் உங்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் என சொல்லி கூல் சுரேஷுக்கு ஒரு வார்னிங் கொடுத்துள்ளார்.

கமல்ஹாசன் முன்னிலையில் சக போட்டியாளர்கள் தன்னைப்பற்றிய விமர்சனங்களை முன்வைத்ததை பார்த்து ஷாக் ஆன கூல் சுரேஷ், செய்வதறியாது திகைத்துப்போன காட்சி தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்தவாரம் கூல் சுரேஷ் தான் அனைவரின் டார்கெட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

of

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/MpWFbPf5vl

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... 2-ம் பாகத்துக்காக லியோ படத்தில் லோகேஷ் வைத்துள்ள செம்ம டுவிஸ்ட்... அட இதை யாருமே நோட் பண்ணலயேப்பா!

click me!