சாபக்கல் கொடுத்து டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்... நாமினேஷனில் சிக்கும் கூல் சுரேஷ்! அனல்பறக்கும் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட் ஆக கொடுக்கப்பட்ட டாஸ்கில் கூல் சுரேஷை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் நேரடியாக நாமினேஷனுக்கு தேர்வு செய்துள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது விசித்ரா, மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, பிரதீப், சரவண விக்ரம், விஷ்ணு விஜய், அக்‌ஷயா, யுகேந்திரன், ஐஷூ, நிக்சன், ஜோவிகா, விஜய் வர்மா, வினுஷா என 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தினசரி ஏதேனும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் இன்று சாபக்கல் ஒன்றை ஹவுஸ்மேட்ஸிடம் கொடுத்த பிக்பாஸ், அந்த சாபக்கல்லை யாரேனும் ஒரு போட்டியாளருக்கு கொடுக்க வேண்டும் என கூறுகிறார். அதிகப்படியான நபர்களால் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் கையில் அந்த சாபக்கல் கொடுக்கப்படும் என அறிவிக்கிறார் பிக்பாஸ்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து ஒவ்வொரு போட்டியாளராக வந்து, யாருக்கு அந்த சாபக்கல்லை கொடுக்கப்போவதாக கூறுகின்றனர். அதில் பெரும்பாலானோர் கூல் சுரேஷை தான் தேர்வு செய்தனர். இந்த சாபக்கல் வாங்கும் போட்டியாளர் உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து சுமால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவதோடு, அடுத்தவார நாமினேஷனுக்கும் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்.

அந்த வகையில் அனைவரும் தன்னை தேர்வு செய்ததை பார்த்து கடுப்பான கூல் சுரேஷ், ஹவுஸ்மேட்ஸை பார்த்து என்னைப்பார்த்தல் இளிச்ச வாயன் மாதிரி தெரியுதா என கோபத்தில் அனைவரிடமும் சண்டை போட்டுள்ளார். இதுகுறித்த புரோமோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

of

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/DRT4wlmegj

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... 'லியோ' சக்சஸ் ஆக ராமேஸ்வரம் கோவிலுக்கு சர்ப்ரைஸ் விசிட்! சுற்றிவளைத்த ரசிகர்கள்.. ஆட்டோவில் கிளம்பிய லோகேஷ்

click me!