பூர்ணிமா vs விஷ்ணு மோதல்... ஒரே ஒரு காபியால் கலவர பூமியான பிக்பாஸ் வீடு...!

By Ganesh AFirst Published Oct 17, 2023, 3:49 PM IST
Highlights

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸுக்கு காபி போட்டுக் கொடுக்காததால் பூர்ணிமாவிடம் விஷ்ணு சண்டை போட்ட புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கி முதல் வார இறுதியில் அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வெளியேறிய மறுதினமே உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக பவா செல்லதுரையும் வெளியேறினார். இதனால் தற்போது 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை 2 வீடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதில் பிக்பாஸ் வீட்டின் கேப்டன், தேர்வு செய்யும் 6 போட்டியாளர்கள் சுமால் பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும். வார வாரம் 6 பேர் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவர். அந்த வகையில் இந்த வாரம் கேப்டன் யுகேந்திரன் தேர்வு செய்த மாயா, பூர்ணிமா, விஷ்ணு, சரவண விக்ரம், வினுஷா, பிரதீப் ஆகிய 6 பேர் சுமால் பாஸ் வீட்டில் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளார்கள் தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தேவையான உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கான மெனுவை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் முடிவு செய்ய வேண்டும். மேலும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் எப்போது காபி அல்லது ஸ்நாக்ஸ் கேட்டாலும் அதை சுமால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் செய்து தர வேண்டும் என்பது விதி.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ரவீனா, சுமால் பாஸ் வீட்டில் உள்ள பூர்ணிமாவிடம் தனக்கு காபி வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு பூர்ணிமா போட்டுத்தர மறுத்துள்ளார். இதனால் கடுப்பான விஷ்ணு, பூர்ணிமாவை திட்டியதோடு, பர்சனல் கோபத்தை எல்லாம் கேம்ல காட்டாத என சரமாரியாக சாடிய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

of

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/BOdvuHSNEm

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... ஆத்தி இந்த டாஸ்க்கா... இந்த வாரம் பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மூழ்கப்போகுது!

click me!