பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். தற்போதுவரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 16 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே போட்டிகளும் கடுமையாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அதற்கான நாமினேஷன் புராசஸ் ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அதில் போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் இரண்டு நபர்களையும், அதற்கான காரணத்தையும் கூறி நாமினேட் செய்ய வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியவர்கள் பற்றிய புரோமோ வெளியாகி உள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெரும்பாலானோர் முதலில் குறிப்பிட்டது மாயாவின் பெயரை தான். இதற்கு அடுத்தபடியாக அவருடன் நெருங்கி பழகி வரும் பூர்ணிமாவை டார்கெட் செய்துள்ளனர். குறிப்பாக ரவீனா, அவரிடம் அழகு இருக்குற அளவுக்கு அறிவு இல்லை என கூறி பூர்ணிமாவை நாமினேட் செய்துள்ளார்.
மூன்றாவதாக பிரதீப்பின் பெயரும் இந்த நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கி உள்ளது. அதேபோல் சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள், ஐஷூ, மணி சந்திரா, விசித்ரா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். இந்த வாரமும் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேஷனில் சிக்கி உள்ளதால் அவர்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக எலிமினேட் ஆகிவிடுவார்கள் என நெட்டிசன்கள் தற்போதே யூகிக்க தொடங்கிவிட்டனர்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/gO9iHQ5mQ7
இதையும் படியுங்கள்... மாயா உடன் சேர்ந்து சகுனி வேலையை ஸ்டார்ட் பண்ணிய பூர்ணிமா... சிக்கப்போவது யார்.. யார் தெரியுமா?