உன் வீட்டு வேலைக்காரனா நானு? மட்டு மரியாதை இன்றி பேசிய வனிதா மகள் ஜோவிகாவுக்கு செம்ம டோஸ் கொடுத்த விஷ்ணு

By Ganesh A  |  First Published Oct 15, 2023, 10:04 AM IST

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை வாடா போடா என மரியாதைக் குறைவாக பேசிய ஜோவிகாவை விஷ்ணு விஜய் வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகிறது.


நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். முதல் வாரத்திலேயே விசித்ரா உடன் அனல்பறக்க விவாதம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ஜோவிகா. இந்த சீசனில் மிகவும் டஃப் ஆன போட்டியாளர் எனவும் ரசிகர்கள் அவரை கருதி வருகின்றனர். மறுபுறம் சக போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்கிற புகாரும் ஜோவிகா மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.

நேற்றைய எபிசோடில், கமல்ஹாசன், ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கு பட்டம் கொடுக்க சொன்னார். அதில் விஷ்ணு, ஜோவிகாவுக்கு சுய புத்தி இல்லாதவர் என பட்டம் கொடுத்தார். இதையடுத்து கமல்ஹாசன் பிரேக் எடுத்துக் கொண்டு சென்ற நேரத்தில் ஜோவிகாவுக்கு செம்ம டோஸ் கொடுத்துவிட்டார் விஷ்ணு.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சுயபுத்தி இல்லாதவர்னா என்னன்னு அர்த்தமே தெரியாம என்னைப்போய் சொல்கிறான் என விஷ்ணுவை பார்த்து ஜோவிகா சொல்ல, உடனே கடுப்பான விஷ்ணு, உனக்கு பேசவே தெரியாது. நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா. வாடா போடானு கூப்பிடுற. நான் என்ன உன்னை வாடி போடினா சொல்றேன் என விஷ்ணு கேள்வி எழுப்பியதும், மன்னிப்பு கேட்டார் ஜோவிகா.

தொடர்ந்து பேசிய விஷ்ணு, இங்க இருக்க எல்லாரும் உனக்கு இளக்காரமா தான் இருக்கு. உன்கிட்ட யாரும் எல்லைமீறி பேசக்கூடாது. ஆனா நீ மட்டும் எல்லார் கிட்டையும் எல்லைமீறி பேசுவ. ஒருத்தரிடம் எப்படி பேசனும்னு தெரிஞ்சிட்டு பேசு. எல்லாரும் உங்க வீட்ல வேலை செய்றவங்க கிடையாது என கூறினார். விஷ்ணுவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜோவிகாவுக்கு சரியாக பாடம்புகட்டிவிட்டதாக நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

questions 👌👌

Sometimes Vishnu correct ah than kelvi kekran 👏👏

Jovika you should learn to respect others .. pic.twitter.com/vc83gIX8vJ

— Ellam Nanmaikke 🤘 (@dongryravai)

இதையும் படியுங்கள்... தலைவர் 171 தான் ரஜினிகாந்தின் கடைசி படமா? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த லோகேஷ் கனகராஜ்

click me!