பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் ஸ்டிரைக் பண்ணியதை கண்டித்து கமல்ஹாசன் பேசிய புரோமோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக் பாஸ், சுமால் பாஸ் என இரு வீடுகளில் நடத்தப்படும் இந்த சீசனில், கேப்டனை இம்பிரஸ் பண்ணாத போட்டியாளர்கள் சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் மாயா, விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விஜய் வர்மா, ஐஷூ, பிரதீப் ஆண்டனி ஆகியோர் சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். விதிப்படி அவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்கு தேவையான உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உணவு சமைத்துக் கொடுக்க முடியாது என கூறி சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போராட்டத்தில் குதித்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கறாராக நடந்து கொண்டனர். இதனால் கடுப்பான பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தாங்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இதையடுத்து வெகு நேர போராட்டத்துக்கு பின்னர் இரவு தான் தங்கள் ஸ்டிரைக்கை சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வாபஸ் பெற்றனர்.
இந்த நிலையில் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் நடத்திய போராட்டத்தை கமல்ஹாசன் இன்று கண்டித்துள்ளார். இதுகுறித்து வெளியாகி உள்ள புரோமோவில் கமல் கூறியதாவது : “ஒரு புரட்சி போராட்டம் செஞ்சிங்க. தண்ணிய கூட கொடுக்காம இருந்ததை ஸ்டிரைக்னு சொல்ல முடியாது. ஸ்டிரைக் பண்ணியது நியாயமா, நியாயமில்லையாங்குறது கேள்வியல்ல. நியாயத்துக்காக தான் நீங்க ஸ்டிரைக் பண்றீங்க. அதுல ஒரு நியாயம் இருக்க வேண்டாமா என கமல்ஹாசன் அவர்களை விளாசிய புரோமோ வைரலாகி வருகிறது.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/wdRRYUY1L5
இதையும் படியுங்கள்... கோடிக்கணக்கான சொத்துக்களுடன் நியூசிலாந்தில் செட்டில் ஆன பிக்பாஸ் யுகேந்திரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?