பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்கள் சோகக் கதையை சொல்லும் வகையில் டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 2 வாரங்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் தற்போது 16 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் போட்டி கடுமையாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் எலிமினேஷன் நடக்கும். இதற்காக உள்ளிருக்கும் போட்டியாளர் நாமினேஷன் செய்வர்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் விசித்ரா, மாயா, பிரதீப், பூர்ணிமா, வினுஷா, விக்ரம், மணி சந்திரா, விஜய் வர்மா, அக்ஷயா, நிக்சன், ஐஷூ ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் யாருக்கு மக்கள் குறைவான வாக்குகளை அளிக்கிறார்களோ அந்த போட்டியாளர் இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மறுபுறம் வார வாரம் போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகளும் கொடுக்கப்படும், அந்த வகையில் இந்த வாரம் கடந்து வந்த டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை பற்றி பேசுவார்கள். இந்த டாஸ்க் நடந்தாலே பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மூழ்கிவிடும்.
தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் யுகேந்திரன் தொடங்கி கூல் சுரேஷ் வரை போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் கதையை சொல்கின்றனர். அதில் இறுதியாக கூல் சுரேஷ், தான் பேப்பர் போட்டு சம்பாதித்து பற்றி பேசுகையில் அனைவரும் கண்கலங்கிப் போன காட்சி அந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது. 30 செகண்ட் புரோமோவிலேயே இப்படி செண்டிமெண்ட் காட்சிகள் நிரம்பி உள்ளதால், இன்றைய எபிசோடு பார்த்தி அனைவரும் கண்ணீர் விடப்போவது உறுதி என்பது மட்டும் தெரிகிறது.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/4VPW2w866D
இதையும் படியுங்கள்... ‘லியோ’ சிறப்பு காட்சி; கைவிரித்த தமிழ்நாடு... அனுமதி கொடுத்த புதுச்சேரி - படையெடுக்கும் தளபதி ரசிகர்கள்