நீ மிடில் கிளாஸ் பொண்ணா... ஏமாத்தாத! முதல் இடத்துக்காக முட்டி மோதும் பிரதீப் - ஜோவிகா! அனல்பறக்கும் புரோமோ இதோ

By Ganesh A  |  First Published Oct 26, 2023, 1:11 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற ரேங்கிங் டாஸ்க்கில் பிரதீப் ஆண்டனியும், ஜோவிகாவும் சண்டை போட்டுக்கொண்ட புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியாளர்கள் 1 முதல் 15 இடங்களுக்கான ரேங்கில் நிற்க வேண்டும். முதலில் செல்பவர்களுக்கே இதில் முதல் இடம் கிடைக்கும். அந்த வகையில் பிரதீப் ஆண்டனி வேகமாக வந்து முதல் இடத்தை பிடித்துவிட்டார்.

அதற்கு அடுத்தபடியாக ஜோவிகா இரண்டாவது இடத்தில் நின்று கொண்டிருந்தார். இதில் ஜோவிகா முதல் இடத்திற்கு தான் தகுதியானவர் என கூறியதால், அவர் பிரதீப் ஆண்டனியுடன் வாக்குவாதம் செய்து அந்த இடத்தை பெற முடியும். அதுவும் பிரதீப் சம்மதித்தால் மட்டுமே ஜோவிகாவுக்கு அந்த இடம் கிடைக்கும். ஆனால் பிரதீப் முதல் இடத்தை விட்டுக்கொடுக்கவே மாட்டேன் என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது வாழ்க்கை நிலையை பற்றி பேசத் தொடங்கினர். அப்போது பிரதீப் தான் ஏழை என்பதாலும், தனக்கு உன்னை போல ஆடம்பர வாழ்க்கை வாழ முடியவில்லை என்பதாலும், அதனை அடைய எனக்கு இந்த டைட்டில் முக்கியம், அதனால் எனக்கு முதல் இடம் வேண்டும் என ஆணித்தனமாக கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜோவிகா, நானும் மிடில் கிளாஸ் பொண்ணு தான் என கூறியதைக் கேட்டு கடுப்பான பிரதீப் இப்படி சொல்லி மக்களை ஏமாத்தாத என சொன்னதும், ஜோவிகா கடுப்பாகி கத்த, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. இதனால் இன்றைய எபிசோடு அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

of

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/G4brsbd1rO

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... விவாகரத்துக்கு பின் மீண்டும் மலர்ந்த காதல்... புரபோஸல் பண்ணிய காதலனுக்கு லிப்கிஸ் அடித்து ஓகே சொன்ன அமலா பால்

click me!