பிக்பாஸ் வீட்டில் நிக்சனை காதலித்து வரும் ஐஷூ, தான் வெளியே ஒருவரை காதலித்து வருவதாக கூறிய நிலையில், அவர் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நிக்சனும், ஐஷூவும் காதல் கண்டெண்ட் கொடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் ரவீனா - மணி ஒன்றாகவே சுற்றுவதை பார்த்து, இதெல்லாம் வெளிய போய் வச்சிக்கோங்க என அட்வைஸ் பண்ணிய நிக்சனே தற்போது ஐஷூ பின்னால் சுற்றி வருவது யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயமாக உள்ளது. இந்த காதலால் அவர் விளையாட்டில் முழு கவனம் செலுத்தாமல் ஐஷூவிடம் ரொமான்ஸ் செய்வதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.
நிக்சன், ஐஷூவை உருகி உருகி காதலித்தாலும், ஐஷூ இதை டைம் பாஸுக்கு செய்து வருகிறாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. ஏனெனில் ஒருநாள் மணிசந்திராவிடம் நிக்சன் தன்னை காதலிப்பது பற்றி பேசிய ஐஷூ, தனக்கு ஏற்கனவே வெளியே ஒரு ஆள் இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதைப்பார்த்த பின்னர் தான் ஐஷூ கண்டெண்ட்டுக்காக காதலிக்கிறாரா என்கிற சந்தேகம் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இது ஒருபுறம் இருக்க, ஐஷூ தனக்கு ஆள் இருப்பதாக சொன்ன நபர் யார் என்கிற தகவலும் தற்போது கசிந்துள்ளது. அவர் வேறயாருமில்லை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நிரூப் தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதற்கு காரணம் நிரூப் ஐஷூவின் வீடியோக்களை தொடர்ந்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் லைக் போட்டு வைத்துள்ளார்.
அதில் ஐஷூ ரொம்ப வொர்ஸ்ட் என போட்டிருக்கும் ஒரு வீடியோவை லைக் செய்துள்ளார். அந்த வீடியோவில் ‘கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தன் கூட தொடர்பு வைத்துக் கொள்வது மட்டும் கள்ளக்காதல் அல்ல, ஒருத்தனை காதலிக்கும் போது இன்னொருத்தனுக்கு ஹோப் கொடுக்குறீங்கள்ல அதுக்குபேரும் கள்ளக்காதல் தான். முன்னெல்லாம் உன்னை பாக்கும்போது பக்கம் பக்கமா கவிதை எழுதனும்னு தோணும், ஆனா இப்போ 10 பீப் சாங் எழுதி ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யனும்னு தோணுது’ என்கிற டயலாக் இடம்பெற்றுள்ளது.
இந்த பதிவு வைரலான நிலையில், அதனை டிஸ் லைக் செய்துவிட்டார் நிரூப். இருப்பினும் நெட்டிசன்கள் அந்த வீடியோவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். நிரூப் ஏற்கனவே யாஷிகா, அபிராமி ஆகியோரை காதலித்து பிரேக் அப் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Poduuu Confirmed 😂💯 is Manmadhan Vaishu for 🫢Avan ethana peruku halwa kuduthurpaan avanuke nee halwa kuduthutiye aishu🥲🤦 Avan mala mari irukaan da..pathu unna nasikida poraan🤣 pic.twitter.com/5KgQI5DLBw
— Raghav (@Raghav9099)இதையும் படியுங்கள்... என்னோட கட்சியில் லோகேஷுக்கு இந்த பதவி தான் கொடுப்பேன் - தளபதியின் Thug Life பதில்