முதல்நாளே அழவச்சிட்டீங்களே டா... மாயா அவமானப்படுத்தியதால் கதறி அழுத அர்ச்சனா- பிக்பாஸ் வீட்டில் முற்றும் மோதல்

Published : Oct 30, 2023, 03:54 PM IST
முதல்நாளே அழவச்சிட்டீங்களே டா... மாயா அவமானப்படுத்தியதால் கதறி அழுத அர்ச்சனா- பிக்பாஸ் வீட்டில் முற்றும் மோதல்

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அர்ச்சனா, மாயாவின் செயலால் கடுப்பாகி கதறி அழுத புரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக ஒரு வீட்டில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த சீசனில் மட்டும் இரண்டு வீட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர், தனக்கு சுவாரஸ்யம் இல்லாததாக தோன்று 6 போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களை சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது விதி.

இந்த வார கேப்டனான பூர்ணிமா, புதிதாக வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள அர்ச்சனா, அன்னபாரதி, பிராவோ, கானா பாலா, தினேஷ் ஆகிய 5 பேரையும் தேர்வு செய்து சுமால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி ஒரு கருப்பு ஆடாக விசித்ராவையும் அனுப்பி உள்ளனர். சுமால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இடையே சண்டையை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்னரே பேசிவைத்து விசித்ராவை அனுப்பி உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதற்கு நன்றிக்கடனாக இந்த வார நாமினேஷனில் விசித்ராவை தாங்கள் நாமினேட் செய்ய மாட்டோம் என டீல் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்கும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த போட்டியாளர்களும், ஏற்கனவே உள்ள போட்டியாளர்களும் எலியும், பூனையுமாகவே இருந்து வருகின்றனர். அதில் மாயாவும், அர்ச்சனாவும் தற்போது சண்டை போட்ட புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

தான் வீட்டுக்குள் வந்தபோது மாயா தன்னை வரவேற்காமல் அவமானப்படுத்தியது பற்றி அர்ச்சனா கேட்டதும், அதையெல்லாம் இங்க எதிர்பார்க்கக்கூடாது என மாயா காட்டமாக பதிலடி கொடுக்கிறார். எதிரியாவே இருந்தாலும் அவர்களிடம் 5 நிமிடம் பேசுவதில் என்ன ஆகப்போகிறது என அர்ச்சனா கேட்க, அதற்கு மாயா நக்கலாக சிரித்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அர்ச்சனா அழுததும், அவரை கட்டிப்பிடிக்க மாயா செல்ல, நான் என்னை அவமானப்படுத்தியவரை கட்டிப்பிடிக்க மாட்டேன் என அர்ச்சனா அழுதபடி கூறுகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் வந்த முதல் நாளே இப்படி அழ வச்சி வேடிக்கை பார்க்குறீங்களே டா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எனக்கு நீ... உனக்கு நான்! தினேஷின் பிக்பாஸ் எண்ட்ரிக்கு பின்... ரச்சிதா போட்ட எமோஷனல் பதிவு வைரலாகிறது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?