பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதை அடுத்து போட்டியாளர்கள் பதறி அடித்து ஓடிய புரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அனன்யா ராவ், பவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இந்த வார இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. அதில் வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகி உள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் விறுவிறுப்பை கூட்ட இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். வழக்கமாக அவ்வப்போது ஒருவர் தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள், ஆனால் இந்த முறை வித்தியாசமாக ஒரே நேரத்தில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அவர்கள் சீரியல் நடிகை அர்ச்சனா, கானா பாடகர் கானா பாலா, ரியோவின் நண்பரும் தொகுப்பாளருமான பிராவோ, மேடை பேச்சாளர் பாரதி மற்றும் நடிகை ரக்ஷிதாவின் கணவரும் சீரியல் நடிகருமான தினேஷ் ஆகிய 5 பேர் தான் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
5 பேர் ஒரே நேரத்தில் எண்ட்ரி கொடுத்ததை பார்த்து ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ், அய்யய்யோ இன்னும் எத்தனை பேர் வர போகிறார்களோ என்கிற பயத்தில் இருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது. இந்த வைல்டு கார்டு போட்டியாளர்களின் வரவால் பிக்பாஸ் என்னென்ன டுவிஸ்ட் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/QcWvc0ndrq
இதையும் படியுங்கள்... 5 பேர உள்ள அனுப்பிட்டு... 2 பேரை வெளியேற்றிய பிக்பாஸ்.! வைல்டு கார்டு என்ட்ரியால் நடந்த டுவிஸ்ட்? முழு விவரம்!