இந்த சீசன் அசல் கோளாறு இவர்தான்... பிக்பாஸில் நிக்சன் செய்யும் சில்மிஷ வேலைகள் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

By Ganesh A  |  First Published Oct 31, 2023, 9:06 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ஐஷுவிடம் நிக்சன் செய்யும் சில்மிஷ வேலைகளை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் காதலுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வரை அங்கு ஐஷு - நிக்சன், ரவீனா - மணி, பூர்ணிமா - சரவண விக்ரம் என மூன்று காதல் ஜோடிகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதில் முதல் இரண்டு வாரம் ரவீனா மற்றும் மணி இடையேயான லவ் டிராக் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் ஐஷூவும், நிக்சனும் அவர்களை ஓவர்டேக் செய்துவிட்டனர்.

ஆரம்பத்தில் நிக்சன் தனக்கு தம்பி மாதிரி என கூறி வந்த ஐஷூ, போகப்போக டிராக் மாறி சென்றுவிட்டார். ஐஷூ தான் காதலிப்பதை இதுவரை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நிக்சன் தீவிரமாக காதலித்து வருகிறார். ஐஷூ தன் காதலை வெளிப்படுத்தாததற்கு காரணம், அவருக்கு ஏற்கனவே வெளியில் ஒரு ஆள் இருக்கிறதாம். இதை மணி சந்திராவிடம் ஓப்பனாகவே கூறிவிட்டார் ஐஷூ.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அப்போ பிக்பாஸில் கண்டெண்ட்டுக்காக அவர் காதலித்து வருவதாக சாடி வருகின்றனர். நாளுக்கு நாள் ஐஷூ - நிக்சன் இடையேயான நெருக்கம் அதிகமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் கண்ணாடி அருகே அமர்ந்து முத்தமிட்டுக்கொண்ட வீடியோ வெளியாகி வைரலான நிலையில், தற்போது அந்த ஜோடியின் மேலும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஐஷூவின் புருவம், கண்ணம் ஆகியவற்றை தடவும் நிக்சன், உன் உதடு, மூக்கு என அனைத்து அழகாக இருப்பதாக வர்ணித்து பேசி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவன் என்ன கொஞ்சம் கொஞ்சமா அசல் கோளாறாக மாறிக்கிட்டு வர்றான் என வறுத்தெடுத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் அசல் கோளாறு அங்குள்ள பெண் போட்டியாளர்களிடம் சில்மிஷம் செய்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

thoda ve arampichutan 🙄

He says ur lips are beautiful, eyes are beautiful asal kolar ah transformed fully 👏👏👌 pic.twitter.com/QO6MH0j5PX

— Ellam Nanmaikke 🤘 (@dongryravai)

This season asal kolaru and niva and very worst pic.twitter.com/kGi57ozn6u

— Sekar 𝕏 (@itzSekar)

இதையும் படியுங்கள்... தயாரிப்பாளருடன் 2-வது திருமணம்... காட்டுத்தீ போல் பரவிய தகவல்! வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பிரகதி

click me!