பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற அக்டோபர் 1ந் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்காக ஜிபி முத்து நடித்த புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற அக்டோபர் 1-ந் தேதி 7-வது சீசன் தொடங்க உள்ளது. முந்தைய சீசன்களைப் போல் இல்லாம இந்த சீசனில் பல்வேறு புதுமைகள் காத்திருக்கின்றன. இதுவரை ஒரு வீட்டில் நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை இரண்டு வீட்டில் நடத்தப்பட உள்ளது. இதுவரை எந்த மொழியிலும் இப்படி ஒரு கான்செப்டை பயன்படுத்தியதில்லை. இதனால் இந்த சீசன் சற்று ஸ்பெஷலானதாகவே பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் 2 வீட்டில் நடைபெறும் என அறிவித்துள்ள கமல், அது எப்படி நடத்தப்படும் என்கிற விவரத்தை சீக்ரெட்டாகவே வைத்துள்ளார். நிகழ்ச்சி தொடங்கும் வரை அதை வெளியிடமாட்டார்கள். இதனால் இந்த 2 வீடு பற்றி பல்வேறு தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளன. இந்த முறை ஆண் போட்டியாளர்கள் ஒரு வீட்டிலும், பெண் போட்டியாளர்கள் ஒரு வீட்டிலும் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், வீடு ரெண்டானதால் பிக்பாஸும் இரண்டு பேர் இருப்பார்கள், அதில் ஒருவர் பெண் என்றெல்லாம் பல தகவல்கள் பரவி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஆஹா இந்த நடிகையா... இவங்க சண்டைக்கோழியாச்சே! சீரியல் வில்லியின் வருகையால் குஷியில் பிக்பாஸ் டீம்!
இந்த நிலையில், ஜிபி முத்து நடித்த புது புரோமோவை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் தனது டிரேட் மார்க் லெட்டர் வீடியோ பாணியில் இந்த சீசன் குறித்து பேசி இருக்கிறார் ஜிபி முத்து. அதில் 2 வீடு என படித்ததும் ஷாக் ஆகிப்போன அவர் ஒரு வீட்டையே சமாளிக்க முடியாது இதுல ரெண்டு வீடா என தன் ஸ்டைலில் பேசி இருக்கிறார். அதுமட்டுமின்றி 2 வீடுனா இந்த முறை 2 டைட்டில் வின்னரா என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
நண்பர்களே.. Bigg Boss 7-ல ரெண்டு வீடா.. ஆச்சர்யமா இருக்கே..🤔 வாங்க October 1 பாக்கலாம்.. ☺️
Bigg Boss Tamil Season 7 Grand Launch - அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. @disneyplushotstartamil … pic.twitter.com/uBQ1O3shea
இதைப்பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் உள்ள நிலையில், தற்போது 2 டைட்டில் வின்னரா என கூறி ஜிபி முத்து புது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக புலம்பி வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கெல்லாம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி விடைகிடைத்துவிடும். எது எப்படியோ இந்த சீசன் டபுள் தமாக்காவாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... நான் 1995 Batch.. 28 ஆண்டுகள் கழித்து பாடமெடுத்த ஆசிரியரை சந்தித்த சூர்யா - குஷியில் வெளியிட்ட புகைப்படங்கள்!