பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகளை மீறியதனால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் புதிதாக இரண்டு வீடு கான்செப்ட் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதில் கேப்டன் விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த வினுஷா, நிக்சன், பவா செல்லதுரை, அனன்யா, ரவீனா, ஐஷு ஆகிய 6 பேர் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தான் அனைவருக்கும் சமையல் செய்து தர வேண்டும், பிக்பாஸ் வைக்கும் டாஸ்க்கில் பங்கேற்க கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
அதேபோல் சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமையல் செய்யும் போது அவர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எந்தவித உதவிகளையும் செய்யக்கூடாது என்கிற ரூல்ஸும் போடப்பட்டு இருந்தது. இந்த ரூல்ஸை மீறிய விசித்ரா மற்றும் யுகேந்திரன் மீது அதிரடியாக ஆக்ஷன் எடுத்துள்ளார் பிக்பாஸ். அதுகுறித்த புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி ரூல்ஸை மீறிய காரணத்தால் யுகேந்திரன் மற்றும் விசித்ரா இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுமால் பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் கூற, அதைக்கேட்ட பிரதீப், ஏற்கனவே நாமினேட் ஆகி சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் ஆறு பேரில் 2 பேரை இங்க அனுப்பி விடுமாறு பிக்பாஸிடம் கோரிக்கை வைத்தார். இதனால் கடுப்பான விசித்ரா, பிரதீப் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காட்சிகள் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.
உடனே எங்க 2 பேருக்கு சமமாக அங்க பிளேயர் இருக்காங்களா என விசித்ரா கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. இதனால் இன்றைய எபிசோடு அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விசித்ரா ஐஷூ பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கமெண்டால் கொந்தளித்து இருந்த ரசிகர்கள், தற்போது அவர் சுமால் பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. " pic.twitter.com/ewKNDR7zUM
இதையும் படியுங்கள்... முதல் வாரமே 2 எலிமினேஷனா... போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்த பிக்பாஸ்... இந்த வார நாமினேஷன் லிஸ்ட் இதோ