பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போட்டியில் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வெற்றிபெற்று மாயாவுக்கு நோஸ் கட் கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் வீடு தற்போது கலவர பூமியாக மாறி இருக்கிறது. அனைத்துக்கும் காரணம் பிரதீப்பின் ரெட் கார்டு எவிக்ஷன் தான். அவருக்கு ரெட் கார்டு கொடுத்த பெண் போட்டியாளர்களுக்கு எதிராக விசித்ராவும், அர்ச்சனாவும் களமிறங்கியதால், இருதரப்புக்கும் இடையே நேற்று முழுக்க வார்த்தை மோதல்கள் வெடித்தன. இந்த பிரச்சனையால் சுமால் ஹவுஸ்மேட்ஸை பழிவாங்க முடிவெடுத்த மாயா, அவர்களை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார்.
இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விசித்ராவும், அர்ச்சனாவும் சுமால் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது அது விதிமீறல் என மாயா கூறினாலும் அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் இருவருமே மெளன விரதத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்றைய எபிசோடிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நீடித்துள்ளது. சுமால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் மீதுள்ள கடுப்பில் அவர்களை டாஸ்கில் ஜெயித்து வச்சு செய்ய உள்ளதாக மாயா நேற்றே கூறி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறிப்பாக வீடு சுத்தம் செய்யும் டாஸ்க்கில் ஜெயித்தால் அவர்களை வேலை வாங்கி டார்ச்சர் செய்ய உள்ளதாக வீரவசனம் பேசினார். ஆனால் இன்று நடைபெற்ற கிளீனிங் டாஸ்க்கில் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வெற்றிபெற்று மாயாவுக்கு பல்பு கொடுத்துவிட்டனர். இதனால் மாயா போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டது. இந்த டாஸ்க்கில் வென்றதும் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கொண்டாடிய வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Small Boss Team won the task 😂💥
Maya 🤡 🤣
pic.twitter.com/WX16s3Vu1G
இந்த டாஸ்க்கில் தோற்ற பின்னர், வீட்டில் உள்ள தன்னுடைய கேங்கிடம் பேசிக்கொண்டிருந்த மாயா, அவர்கள் லக்கில் ஜெயித்துவிட்டதாக கூறி தன் மனதை தேற்றிக்கொண்டார். மறுபுறம் பூர்ணிமா, ஜெயித்ததும் அர்ச்சனாவின் வாயை பார்த்தியா என கேட்டு உருவகேலி செய்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன அடி கொஞ்சம் ஓவரோ என கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.
SBH won the task 😂
Vaitherichal la Bullygang saya they won by fluke ahm . Eriyudhu adhungaluku 🤣🤣 pic.twitter.com/tpnxDaiuog
இதையும் படியுங்கள்... கமலின் பர்த்டே பார்ட்டினா சும்மாவா... கோலிவுட் முதல் பாலிவுட் வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்