
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிந்துள்ளன. இந்த நிலையில் பிக்பாஸ் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
அதேபோல பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ மற்றும் அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அனுப்பப்பட்டனர். இதில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி மற்றும் அன்ன பாரதி வெளியே அனுப்பப்பட்டனர்.
நிக்சன் பிரதீப்பை பற்றி கமலஹாசனிடம் சொல்லும் பொழுது அவர் தரம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என்ற வார்த்தையை உபயோகித்து இருந்தார். தரத்தை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நிக்சனை நெட்டிசன்கள் வெளியே அவரை கிழித்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது நோக்கம் இல்லை என்றாலும் நிக்சனை பற்றி வெளியே தெரிய வேண்டும் என்பதால் சில வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்கள். அதில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சில போட்டியளர்களிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா