பிரதீப்பை பிளான் போட்டு ரெட் கார்டு வாங்கி கொடுத்து வெளியே அனுப்பிய மாயா, பூர்ணிமா தற்போது இன்னொரு ஆண் போட்டியாளரை டார்கெட் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கும் அளவுக்கு தகுதி உள்ள போட்டியாளராக வலம் வந்த பிரதீப் ஆண்டனி, கடந்த வாரம் திடீரென ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவரால் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெரும்பாலானோர் கூறியதைக் கேட்டு கமல்ஹாசன் அதிரடியாக அவரை வெளியே அனுப்பினார். அவரின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
போட்டியாளராக இருக்கும் போதே செம்ம சண்டை போடும் மாயா, இந்த வாரம் கேப்டனாகவும் பதவி ஏற்று உள்ளதால், பிக்பாஸ் வீடு ஒரு கலவர பூமியாகவே மாறி இருக்கிறது. அவர் திட்டமிட்டு 6 பேரை தேர்வு செய்து சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்ததோடு, அவர்களிடம் வேலை சொல்லி டார்ச்சர் செய்து வருகிறார். அவர் அடிமை போல் நடத்துவதாக கூறி சுமால் பாஸ் வீட்டார் வாக்குவாதம் செய்த புரோமோ காட்சிகளும் வெளியாகி இருந்தன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில், பிரதீப்பை போல் மற்றுமொரு போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற மாயா திட்டமிடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் பெட்ரூமில் ஐஷூ மற்றும் பூர்ணிமா உடன் உரையாடும் போது, வைல்டு கார்டு போட்டியாளராக வந்துள்ள பிராவோ, நடந்து போகும் போது கூட அப்படியே குறு குறுவென பார்ப்பதாக கூறுகிறார்.
இதற்கு ஐஷூவும் ஆமாம் எனக்கூறி, அவர் ரொம்ப தப்பு தப்பா பார்ப்பதாக கூறுகிறார். இதைக்கேட்டு பூர்ணிமா ஷாக் ஆக, ஐஷூ, அவன் மூஞ்சி பார்த்து பேச மாட்டான் என்று கூறுகிறார். உடனே மாயா, பூர்ணிமாவின் உடையில் கைவைத்து, நீங்க நடந்து போகும் போது எல்லா இடத்தையும் பாக்குறான் என சுட்டிக்காட்டி பேசி உள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Next sketch to …🙄
Nadathunga… take democracy vote again and send bravo out
pic.twitter.com/LC12DENvRz
இதையும் படியுங்கள்... டூப் போடாமல் சிங்கத்துடன் சண்டை! நொறுங்கிய எலும்பு! அரிய தகவல்களுடன் கமலுக்கு வாழ்த்து கூறிய சிவகுமார்!