மாருதியின் முதல் Mid-Size எஸ்.யு.வி. - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

By Kevin Kaarki  |  First Published Jul 8, 2022, 7:50 AM IST

மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவு பல்வேறு அசத்தல் மாடல்களை கொண்டு இருக்கிறது. இது மிகவும் போட்டி நிறைந்த பிரிவு ஆகும்.


மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலின் இந்திய வெளியீடு ஜூலை 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அமோக வரவேற்பு இருந்து வரும் நிலையிலும், மாருதி சசுகி இதுவரை மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யாமலேயே இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் டூ-வீலர் உருவாக்கும் இந்துஸ்தான் மோட்டார்ஸ் - எப்போ வெளியீடு தெரியுமா?

Latest Videos

undefined

“எண்ட்ரி எஸ்.யு.வி. பிரிவில் நாங்கள் பிரெஸ்ஸா மாடலை வைத்து இருக்கிறோம். இது சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. எனினும், மிட்-எஸ்.யு.வி. பிரிவில் நாங்கள் எங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சந்தையில் எங்களுக்கான பங்குகளை பெற, நாங்கள் எஸ்.யு.லி. பிரிவை சக்திவாய்ந்த ஒன்றாக மாற்ற வேண்டும்,” என மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: உலகில் இந்த புகாட்டி காரை வைத்திருக்கும் ஒரே இந்தியர் இவர் தான்...!

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்:

மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவு பல்வேறு அசத்தல் மாடல்களை கொண்டு இருக்கிறது. இது மிகவும் போட்டி நிறைந்த பிரிவு ஆகும். இந்த பிரிவில் மேலும் ஏராளமான மாடல்கள் அறிமுகமாக காத்துக் கொண்டு இருக்கின்றன. டொயோட்டா நிறுவனம் தனக்கான மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது. சில தினங்களுக்கு முன்பு தான் டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை அறிமுகம் செய்து இருந்தது.

இதையும் படியுங்கள்: மணிக்கு 322 கிமீ வேகம்.... அதிரடியாய் உருவாகும் ஹெனசி ஹைப்பர்கார்...!

இது இந்திய சந்தையில் கிடைக்கும் முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்.யு..வி. மாடல் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் தொழில்நுட்பத்தை கொண்டு இருக்கும் என தெரிகிறது.

எஸ்.யு.வி. போட்டி:

இரு மாடல்களிலும் 1.5 லிட்டர் மோட்டார், ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் AWD வெர்ஷனை கொண்டிருக்கும்.  சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து இந்திய சந்தையில் நிலவும் எஸ்.யு.வி. போட்டியில் இரு நிறுவன மாடல்களை கொண்டு எதிர்கொள்ள திட்டமிட்டு உள்ளன. இவ்வாறு செய்யும் போது நீண்ட போட்டியை எதிர்கொள்ள முடியும். 

முன்னதாக டொயோட்டா அறிமுகம் செய்த ஹைரைடர் மாடல் மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதல் முதல் வேரிண்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும், ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எலெக்ட்ர்க் மோட்டார் மற்றும் லித்தியம் அன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. 

click me!