எலெக்ட்ரிக் டூ-வீலர் உருவாக்கும் இந்துஸ்தான் மோட்டார்ஸ் - எப்போ வெளியீடு தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Jul 7, 2022, 11:02 AM IST
Highlights

கார் மாடலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்க இந்துஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்து இருக்கிறது.

1942 ஆண்டு துவங்கப்பட்ட இந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் பழைமையான கார் உற்பத்தியாளர் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. 1980-க்கள் வரை சந்தையில் மிகவும் பிரபல கார் உற்பத்தியாளராக விளங்கிய இந்துஸ்தான் மோட்டார்ஸ் அதன் பின் விற்பனை நிறுத்தப்படும் வரையிலும் கணிசமான விற்பனையை பதிவு செய்து வந்தது. 2017 ஆண்டு வாக்கில் அம்பாசடர் பிராண்டு பெயரை க்ரூப் பிஎஸ்ஏ ரூ. 80 கோடிக்கு வாங்கியது.

இதையும் படியுங்கள்: உலகில் இந்த புகாட்டி காரை வைத்திருக்கும் ஒரே இந்தியர் இவர் தான்...!

இந்தய சந்தையில் முதல் ஆட்டோமோடிவ் உற்பத்தியாளரான இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் சந்தையில் களமிறங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் ரி எண்ட்ரி கொடுக்க இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக தெரிகிறது. பயணிகள் வாகனத்திற்கு மாற்றாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்க இந்துஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்து இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: மணிக்கு 322 கிமீ வேகம்.... அதிரடியாய் உருவாகும் ஹெனசி ஹைப்பர்கார்...!

இந்த தகவலை அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கவும் திட்டமிட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். இந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் ஐரோப்பிய நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் மற்றும் வியாபார முறைகள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

இதையும் படியுங்கள்: 225சிசி பைக்கின் விலை இவ்வளவு தானா? டிவிஎஸ் அதிரடி...!

எனினும், இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் மாதங்களில் இது பற்றிய அறிவிப்புகள்  வெளியாகும் என இந்துஸ்தான் மோட்டார்ஸ் இயக்குனர் உத்தம் போஸ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். முதலீடு செய்வது தொடர்பான முடிவுகள் எட்டப்பட்டு, புதிய நிறுவனம் உருவாக்கப்படும். இந்த பணிகள் பிப்ரவரி 215, 2023 வாக்கில் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டதும் முதல் திட்டம் துவங்கப்படும். அதன் படி முழுமையாக உருவாக்கப்பட்ட மாடல் அடுத்த நிதியாண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். முதலில் சில ஆண்டுகளுக்கு எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து, அதன் பின் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உத்தர்பாரா ஆலையில் கூடுதலாக கண்ட்ரோல் சிஸ்டம்கள் மற்றும் எலெக்டிரானிக் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளன. இந்த ஆலையில் 300 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். முன்னதாக உத்தர்பாரா ஆலையை ஒட்டிய சுமார் 314 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. புது திட்டங்கள் செயல்பாட்டு வரும் போது, புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு சுமார் 400 பேர் வரை பணியாற்றுவர் என தெரிகிறது. 

click me!