புதிய டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி, 4 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவுக்குள் களமிறங்கி இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த ரோனின் மோட்டார்சைக்கிள் ஒரு வழியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரோனின் 225சிசி கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.
இதையும் படியுங்கள்: இத்தனை கோடிகளா? இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 விலை உயர்ந்த கார்கள்...!
undefined
இந்த மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 69 ஆயிலம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. புதிய டிவிஎஸ் ரோனின் மாடலில் ஏராளமான அம்சங்கள் முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: விற்பனையில் திடீர் சரிவு... நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் - என்ன காரணம் தெரியுமா?
அம்சங்கள்:
இது மட்டும் இன்றி இந்த மாடலில் ஏராளமானஎ பிராண்டட் மெர்சண்டைஸ், கஸ்டம் அக்சஸரீக்கள், கான்ஃபிகரேட்டர் மற்றும் பிரத்யேக எக்ஸ்பீரியன்ஸ் ப்ரோகிராம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்.இடி. லைட்டிங், யு.எஸ்.பி. சார்ஜர், டிவிஎஸ் ஸ்மார்ட் Xonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கால் மற்றும் மெசேஜ் அலர்ட்கள், டன்-பை-டன் நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதையும் படியுங்கள்: இந்திய விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 கார்கள்... எந்தெந்த மாடல்கள் தெரியுமா?
இத்துடன் ஏ.பி.எஸ். - அர்பன் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்கள், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி, 4 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.4 ஹெச்.பி. பவர், 19.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
பிரேக்கிங் பவர்:
சஸ்பென்ஷனுக்கு டிவிஎஸ் ரோனின் மாடலின் முன்புறம் கோல்டன், 41 மில்லிமீட்டர் யு.எஸ்.டி. ஷோவா மற்றும் பின்புறத்தில் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் பர்பஸ் டையர் மற்றும் அலாய் வீல்களை கொண்டு இருக்கும் டிவிஎஸ் ரோனின் பிரேக்கிங்கிற்கு இரண்டு புறங்களிலும் டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் ரோனின் மாடலின் வீல்பேஸ் 1357எம்எம் அளவில் உள்ளது. இதன் மொத்த எடை 160 கிலோ ஆகும். இந்திய சந்தையில் புதிய ரோனின் மாடல் யமஹா FZ-X, ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ஹோண்டா ஹைனெஸ் CB350, பஜாஜ் பல்சர் 250s மற்றும் டாமினர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.