780 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் கார் - இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ்..!

By Kevin Kaarki  |  First Published Jul 6, 2022, 2:02 PM IST

இரு வேரியண்ட்களில் எந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. 


மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. அதன் படி மேட் இன் இந்திய EQS ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் செடான் மாடலும், இதைத் தொடர்ந்து EQB எஸ்.யு.வி. மாடல் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளன. 

இதையும் படியுங்கள்: விற்பனையில் திடீர் சரிவு... நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் - என்ன காரணம் தெரியுமா?

Tap to resize

Latest Videos

EQS போன்று இல்லாமல் EQB எஸ்.யு.வி. மாடல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்படவில்லை. இந்த மாடல் GLB எஸ்.யு.வி. காரின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும். EQB மாடல் ஏழு சீட்களை கொண்ட எஸ்.யு.வி. மாடல் ஆகும். இதில் பிளான்க்டு ஆப் முன்புற கிரில், பின்புறத்தில் ஃபுல் விட்த் எல்.இ.டி. லைட் பார் உள்ளது. இதன் இண்டீரியர் ஐ.சி.இ. மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது. 

இதையும் படியுங்கள்: இந்திய விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 கார்கள்... எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

சர்வதேச சந்தையில் EQB மாடல் 228 ஹெச்.பி. பவர் வழங்கும் டூயல் மோட்டார் 300 4 மேடிக் மற்றும் 292 ஹெச்.பி. பவர் வழங்கும் டூயல் மோட்டார் 4மேடிக் என இரண்டு டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இரு வேரியண்ட்களில் எந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. 

இதையும் படியுங்கள்: குட்டி 'பிரேக்' போதும்.. சார்ஜ் ஏறிடும்.. நாட்டின் அதிவேக பாஸ்ட் சார்ஜரை இன்ஸ்டால் செய்த கியா..!

இந்திய சந்தையில் புதிய ஆல் எலெக்ட்ரிக் EQS செடான் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி விட்டது. எனினும் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த கார் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலின் 4 மேடிக் மாடல் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

இது டூயல் மோட்டார் செட்டப் - ஒவ்வொரு ஆக்சில்களிலும் - வழங்கப்பட இருக்கிறது. இது ஆல் வீல் டிகைவ் வசதியை வழங்குவதோடு 523 ஹெச்.பி. பவர் மற்றும் 856 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 107.8 கிலோவாட் பவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 780 கிமீ ரேன்ஜ் வழங்கும். 

click me!