குட்டி 'பிரேக்' போதும்.. சார்ஜ் ஏறிடும்.. நாட்டின் அதிவேக பாஸ்ட் சார்ஜரை இன்ஸ்டால் செய்த கியா..!

By Kevin Kaarki  |  First Published Jul 6, 2022, 7:59 AM IST

இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது பாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது.


கியா இந்தியா நிறுவனம் குருகிராமில் உள்ள தனது விற்பனையகம் ஒன்றில் இந்தியாவின் முதல் அதிவேக பாஸ்ட் சார்ஜரை இன்ஸ்டால் செய்து இருக்கிறது. 150 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட DC பாஸ்ட் சார்ஜர் ஆனது திங்ரா கியா விற்பனை மையத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக பயணம் செய்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இதையும் படியுங்கள்: 418 கிமீ ரேன்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் கார்... இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய வால்வோ...!

Tap to resize

Latest Videos

150 கிலோவாட் ஹவர் திறன் இருப்பதால், இந்த பாஸ்ட் சார்ஜர் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 42 நிமிடங்களே ஆகும். எனினும், இது ஒவ்வொரு மாடலை பொறுத்து வேறுபடவும் வாய்ப்புகள் உண்டு. குருகிராமில் உள்ள சம்பந்தப்பட்ட விற்பனை மையத்திற்கு சென்று சார்ஜ் செய்வதற்கு ஏற்ற பணத்தை செலுத்தி பயன் பெற முடியும். 

இதையும் படியுங்கள்: ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி... டாடா மோட்டார்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

15 பாஸ்ட் சார்ஜர்கள்:

தற்போது முதல் பாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்து இருக்கும் கியா இந்தியா நிறுவனம் அடுத்த மாதத்திற்குள் நாடு முழுக்க 12 நகரங்களில் 15 பாஸ்ட் சார்ஜர்களை இன்ஸ்டால் செய்ய முடிவு செய்து இருக்கிறது. சமீபத்தில் இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது பாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்: இ மொபிலிட்டி-னா என்ன தெரியுமா? வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவு..!

கியா EV6 மாடல் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது மட்டும் இன்றி அறிமுகமாகும் போது கியா EV6 மாடல் ஏராளமான கனெக்டெட் அம்சங்கள் மற்றும் முதல் முறை அம்சங்களை கொண்டு இருந்தது. இந்த மாடலை தொடர்ந்து 2025 வாக்கில் இந்தியாவுக்கான எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய கியா இந்தியா நிறுவனம் முடிவு செய்து உள்ளது. 

எலெக்ட்ரிக் வாகன துறை:

“எலெக்ட்ரிக் வாகன ஒனர்ஷிப்-ஐ கனவாக கொண்டு எங்களின் தலைசிறந்த சர்வதேச எலெக்ட்ரிக் வாகன மாடல் கியா EV-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறோம். இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தற்போது பயணிகள் வாகன மாடல்களுக்கான முதல் DC பாஸ்ட் சார்ஜரை இன்ஸ்டால் செய்து துவங்கி வைப்பதில் பெரும் மகிழச்சி அடைகிறோம். இதன் மூலம் இந்திய எலெக்ட்ரிக் வாகன துறை அதிவேக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்.”

“கியா இந்தியா சார்பில், வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த அனுபவத்தை வழங்குவது மட்டுமே எங்களின் தலையாய நோக்கம். இது போன்ற பாஸ்ட் டசார்ஜிங் தீர்வுகளின் மூலம் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் சார்ஜிங் செய்வது தொடர்பாக எதிர்கொள்ளும் கவலைகளை தீர்த்து விடுவோம். ஆகஸ்ட் 2022-க்குள் நாடு முழுக்க 15 பாஸ்ட் சார்ஜர்களை 12 நகரங்களில் இன்ஸ்டால் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்,” என கியா இந்தியா நிறுவன மூத்த விற்பனை அலுவலர் மியுங் சிக் சோன் தெரிவித்தார். 

click me!