418 கிமீ ரேன்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் கார்... இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய வால்வோ...!

By Kevin KaarkiFirst Published Jul 5, 2022, 10:59 AM IST
Highlights

முழுமையான எலெக்ட்ரிக் வாகனமான வால்வோ XC40 ரிசார்ஜ் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டு இருக்கிறது.

வால்வோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் இந்தியாவில் ஜூலை 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த காரின் வெளியீடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. எனினும், காரை முழுவதுமாக இறக்குமதி செய்ய திட்டமிட்டதால் இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி... டாடா மோட்டார்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

புதிய கார் மாடலை எதிர்கால தொழில்நுட்பமான மெட்டாவெர்ஸ் மூலம் வெளியிட இருக்கிறது. இதனை வால்வோ நிறுவனம் வால்வோ வெர்ஸ் என அழைக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் வாகனமான வால்வோ XC40 ரிசார்ஜ் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டு இருக்கிறது. இந்த பேட்டரி இரண்டு மோட்டார்களுக்கு சக்தியூட்டுகிறது. இந்த காரின் ஒருங்கிணைந்த திறன் 402 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்: இ மொபிலிட்டி-னா என்ன தெரியுமா? வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவு..!

ரேன்ஜ் விவரங்கள்:

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 180 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் இந்த கார் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. வால்வோ  XC40 ரிசார்ஜ் மாடலை முழு சார்ஜ் செய்தால் 418 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது. புதிய  XC40 ரிசார்ஜ் மாடல் பெங்களூரை அடுத்த வால்வோ ஹொசகோட் ஆலையில் அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ரூ. 34 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்திய சந்தையில் வால்வோ  XC40 ரிசார்ஜ் மாடல் கியா EV6 மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

கடந்த ஆண்டு வால்வோ நிறுவனம் வால்வோ XC60, வால்வோ S90 மற்றும் வால்வோ XC90 மாடலை 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்தது. இதன் மூலம் டீசல் வாகனங்களை தவிர்த்து ஆல்-பெட்ரோல் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. 

வால்வோ இந்தியா ஃபிளாக்‌ஷிப் மாடல்கள்:

இந்திய சந்தையில் வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் கார் மாடல்களில் வால்வோ XC40, வால்வோ XC60, வால்வோ S60 மற்றும் வால்வோ S90 உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன. தற்போது விற்பனை செய்யப்படும் ஃபிளாக்‌ஷிப் XC90, XC60, XC40 மற்றும் S90 உள்ளிட்டவை பெங்களூரில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படுகின்றன. 

கார் மாடல்களை உள் நாட்டிலேயே அசெம்பில் செய்யும் போது கியா EV6 மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல்களுக்கு எதிராக விலை அடிப்படையில் கடும் போட்டியை ஏற்படுத்த முடியும். 

click me!